மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2487)
📖 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
📖 துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
📖 மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
📖 நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.
🌻 நடு நின்று உதிக்கும் (1) – இந்திரன், (2) – அங்கி, (3) – யமன்,
🌻 (4) – போற்றும் நிறுதி, (5) – வருணன், (6) – நல்வாயு,
🌻 (7) – மதிக்கும் குபேரன், (8) – வடதிசை ஈசன்
🌻 என திசைகள் தோறும் நிறைந்து நின்றாரே.
✍🏻 பின்குறிப்பு – திசைகள் எட்டிற்கு ஏற்ப ஆற்றல் மாற்றம் அடைகின்றது.
சிவாகமம் – (2488)
📖 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
📖 மருங்கிய மாயா புரியத னுள்ளே
📖 சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
📖 ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
🌻 ஒட்டு மொத்தமாக இருக்கும் பூவிற்கு இதழ் எட்டாகும்.
🌻 மாறும் மாயா புரிந்து கொள்வதற்கு ஏற்ப
🌻 சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
🌻 ஒருங்கிய சோதியை ஒத்திசைந்து எழும் உய்ந்தே.
✍🏻 பின்குறிப்பு – எட்டு இதழ் தாமரைப் போன்றது பூவுலகம்.