மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2488)
📖 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
📖 மருங்கிய மாயா புரியத னுள்ளே
📖 சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
📖 ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
🌻 ஒட்டு மொத்தமாக இருக்கும் பூவிற்கு இதழ் எட்டாகும்.
🌻 மாறும் மாயா புரிந்து கொள்வதற்கு ஏற்ப
🌻 சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
🌻 ஒருங்கிய சோதியை ஒத்திசைந்து எழும் உய்ந்தே.
✍🏻 பின்குறிப்பு – எட்டு இதழ் தாமரைப் போன்றது பூவுலகம்.
சிவாகமம் – (2489)
📖 மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
📖 விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
📖 எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளூறிற்
📖 பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.
🌻 மொட்டாக இருந்தபடி அலரும் தாமரை மூன்று உள்ளன.
🌻 அந்த மூன்றில் விட்டத்தில் அலர்கின்ற சோதி விரிசுடர்
🌻 எட்டு அலருள்ளே இரண்டு அலர் உள்ளூறிற்
🌻 பட்டு அலர்கின்ற ஓர் பண்டங் கனாவே.
✍🏻 பின்குறிப்பு – உபதேசப் பொருளின் உள்வட்டத்தின் கவனத்தால் உண்மை அறியலாம்.
சிவாகமம் – (2490)
📖 ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
📖 நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
📖 கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்
📖 வேறே யிருக்கும் விழுபொருள் தானே.
🌻 ஆறு அருவி குளம் என வழங்கும் ஒன்று நம்மிடத்தில் உண்டு
🌻 ஒரு நூறு அளவு சிவகதி நுண்ணியதின் வண்ணம்
🌻 கூறே பிரிந்து உண்மை விளங்கும் குவிந்த முலைக் கொண்பனையாள் உடன்
🌻 வேறே இருக்கும் விழுப் பொருள் தானே.
✍🏻 பின்குறிப்பு – உபதேசப் பொருளை சிவகதியால் அடைய ஈசனை உணரலாம்.
சிவாகமம் – (2491)
📖 தி கையெட்டும் தேரெட்டும் தேவதை எட்டும்
📖 வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
📖 வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
📖 முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.
🌻 திசைகள் எட்டும் சென்றடையும் தேர் எட்டும்
🌻 துணையாகும் தேவதை எட்டும் என வகை எட்டுமாய் நின்று ஆதிப்பிரானை
🌻 வகை எட்டுடன் நான்கும் என அங்கே நிறைந்து
🌻 முழுவதுமாய் உள்ளே நின்று உதிப்பதற்கே.
✍🏻 பின்குறிப்பு – எத்திசையில் தேடினும் உள் நின்று இயங்குவதால் ஆதிபிரானை அடையலாம்.
சிவாகமம் – (2492)
📖 ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
📖 வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
📖 ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
📖 தாழ்வது வான தனித்தன்மை தானே.
🌻 ஏழு சக்கரம் முழுவதும் செயல்படும் எட்டாவதாகிய
🌻 உடலில் வாழும் பரம் என்பது உடலின் ஒன்பதாவது இடத்தில்
🌻 ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
🌻 தாழ்வதுவான தனித்தன்மை தானே.
✍🏻 பின்குறிப்பு – உடலில் வெளிப்பட்டாலும் எளிமையானதாகவே பரம் இருக்கிறது.
சிவாகமம் – (2493)
📖 பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
📖 நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
📖 செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
📖 அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே.
🌻 பல ஊழிகள் பண்பட்டவன் பகலோன். இறையவன்
🌻 நல்ல ஊழி ஐந்தினுள்ளே நின்று
🌻 மேலும் செல்லும் ஊழிகள்
🌻 ஊடே உச்சியாய் ஒன்றாய் நிற்பவன் பகவனே.
✍🏻 பின்குறிப்பு – ஊழிகள் பல ஆயினும் ஒன்றாக நிலைப்பவன் இறையே.
சிவாகமம் – (2494)
📖 புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
📖 திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
📖 எரியு மழையும் இயங்கும் வெளியும்
📖 பரியுமா காசத்திற் பற்றது தானே.
🌻 ஆட்சி புரியும் உலகினில் அறிந்து பூண இயலாதவனை
🌻 திரியும் யானைகளுடன் தேவர் கூட்டம் எல்லாம் தேடுகின்றன.
🌻 வெப்பமும் மழையுமாய் வெளியில் இயங்கும்
🌻 வெளிப்பட்ட ஆகாசத்திற்கு பற்று அதுவே.
✍🏻 பின்குறிப்பு – அறியமுடியாமல் இருப்பினும் அவனே எல்லாமாய் வெளிப்படுகிறான்.
சிவாகமம் – (2495)
📖 ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
📖 ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
📖 சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
📖 பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.
🌻 ஊற்றாக இருப்பதற்கு மாற்றாகவும் மாறி உயர்ந்த உச்சியின் மேலும்
🌻 ஆறுபோல் இல்லாமல் பாயும் அருங்குளம் ஒன்று உண்டு.
🌻 சேறு இன்றிப் பூத்த செழுங்கொடி தாமரைப்
🌻 பூவின்றி சூடான் புரிசடையோனே.
✍🏻 பின்குறிப்பு – உபதேசப் பொருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.
சிவாகமம் – (2496)
📖 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
📖 நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
📖 வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
📖 சென்றும் இருந்தும் திருவடை யோரே.
🌻 ஒன்றாகவே இருந்ததும் இரண்டாகவும் ஆனதும் ஒருங்கிய காலத்து
🌻 நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
🌻 வென்று இருந்து விகிர்தனை நாடுவர்.
🌻 சென்றாலும் இருந்தாலும் திரு உள்ளவர்களே.
✍🏻 பின்குறிப்பு – எந்நிலையிலும் இறை தேடல் உள்ளவர் உணர்வார் இறையை.
சிவாகமம் – (2497)
📖 தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
📖 நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
📖 பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
📖 பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.
🌻 தொன்மையான பதம் (1) – விசுவன், (2) – தைசதன்,(3) – பிராஞ்ஞன்
🌻 நல்ல பதம் (4) – விராட்டன், (5) – பொன்கருப்பன், (6) – விகிர்தன்,
🌻 அடுத்த பதம் (7) – இதையன், (8) – பிரசாபத்தியன்
🌻 புவியை சார்ந்த (9) – சாந்தன் என பொருந்துவது அவரவர் அபிமானத்தாலே.
✍🏻 பின்குறிப்பு – அபிமானத்தால் பெற்ற பெயர்கள் ஒன்பது.