மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2480)
📖 ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
📖 பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்
📖 கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
📖 பொன்றாத போது புனைபுக ழானே.
🌻 ஆதாரமான ஒன்றாய் உலகுடன் வளர்வதற்கு எல்லாம் பரந்தவன்
🌻 அதன்பின் அதற்கு அருள் செய்து பேரருள் உடன் ஆள்பவன்.
🌻 அழுக்கற்ற மனம் கொண்டவர் கல்வியில் நல்லவன்.
🌻 போற்ற மறுத்தாலும் பொய்யற்ற புகழ் உடையவனே.
✍🏻 பின்குறிப்பு – இறை என்றும் புகழின் உச்சியில் இருப்பதே.
சிவாகமம் – (2481)
📖 போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
📖 ஏற்றியே தென்றும் எறிமணி தான் அகக்
📖 காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
📖 அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
🌻 போற்றி என்றேன் எனது தந்தையின் பொன்னான சேவடி
🌻 ஏற்றியபடியே என்றும் எறிமணிதான் உள் எழும்
🌻 அகக்காற்றின் விளக்கது உடல் மயக்கத்தில் விழும்
பொழுது
🌻 அதை இல்லாதபடி செய்து மாறுவதை கண்டேனே.
✍🏻 பின்குறிப்பு – யோக பயிற்சியால் மயக்கம் அறுபடும்.
சிவாகமம் – (2482)
📖 நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
📖 ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
📖 கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
📖 மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.
🌻 நேசிக்கின்றேன் எந்தன் உள்ளே நேராக இருக்கும் நந்தியை.
🌻 உள்ளே புகுந்த ஆற்றல் பெற்றவர்கள் கூட உணரவில்லை.
🌻 தனக்குள் கண்டவன் கோலங்கன்.
🌻 எனக்குள் மூடிக் கண்டேன் உலகம் ஏழுங் கண்டேனே.
✍🏻 பின்குறிப்பு – தனக்குள் மட்டுமே தலைவனை அறிய முடியும்.
சிவாகமம் – (2483)
📖 ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
📖 தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்
📖 டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
📖 வானகஞ் செய்யு மறவனு மாமே.
🌻 உண்டாகும் புகழும் வாய்த்த ஞானமும்
🌻 சேர்த்த அனுபவமும் இருக்கும் சின்ன அறை உண்டு
🌻 அதில் ஒன்றி உணர்வு செய்பவர்க்கு
🌻 வானகம் செய்யும் மறவன் என்று ஆகுமே.
✍🏻 பின்குறிப்பு – திருவடி உணர்வால் வானவர் மறவன் ஆகலாம்.
சிவாகமம் – (2484)
📖 மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
📖 தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
📖 தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
📖 காமல மற்றார் அமைவுபெற் றாரே.
🌻 சிறந்த அறிவால் நிலைத்த அறிவு பெற்ற மாதவத்தவர்
🌻 தூய அறிவாகும். அடுத்தவருக்கும் வழிகாட்டும் சுடர் போன்ற பரமானந்தம்
🌻 தாமதிக்காமல் யாவருக்கும் அமைதி உண்டாக்கி
🌻 மலம் அற்றவர் அமைதி பெற்றாரே.
✍🏻 பின்குறிப்பு – யோகி தானும் அமைதி பெற்று அடுத்தவருக்கும் அமைதி வழங்கிபரமானந்தம் என்ற அறிவை பெற்றவர் ஆவார்.
சிவாகமம் – (2485)
📖 பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
📖 டிதமுற்ற பாச இருளைத் துரந்து
📖 மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
📖 திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.
🌻 வார்த்தையால் மூன்று என முத்தியை வரையறுப்பதை கைவிட்டு
🌻 முற்றவிடாமல் தடுக்கும் பாச இருளைக் கடந்து
🌻 மதமற்று நான் என்பதை மாற்றிவிட்டு அங்கே
🌻 திடமுடன் இருப்பவர்கள் சிவசித்தர் ஆவார்.
✍🏻 பின்குறிப்பு – உள்ளதை உள்ளபடி அறிந்து மதம் கடந்தவர் சிவசித்தர்.
சிவாகமம் – (2486)
📖 சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
📖 சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
📖 முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
📖 சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
🌻 சித்தர் என்பவர் சிவத்தை கண்டவர் சீருடன் சுத்தம்
🌻 ஆசுத்தம் என்ற தத்துவத்தை நன்கு அறிந்து அதில் ஈடுபடாமல்
🌻 முத்திக்கு முத்தரமாய் இருக்கும் மூலத்தார் மூலத்து
🌻 சத்தர் சதாசிவத் தன்மை உடையவரே.
✍🏻 பின்குறிப்பு – உண்மை அறிந்தவர் சிவத்தின் தன்மையுடன் இருப்பர்.