மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2466)
📖 முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
📖 பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
📖 சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
📖 சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
🌻 முத்திக்கு ஆதாரம் முதலான ஒன்றின் ஞானமே.
🌻 பத்திக்கு ஆதாரம் பணிந்து உகந்து பற்றுவதே.
🌻 சித்திக்கு ஆதாரம் சிவபரம் தானாக ஆதல்.
🌻 சத்திக்கு வித்து தனது உபசாந்தமே.
✍🏻 பின்குறிப்பு – நிதானமே நிறைவுக்கு வழி.
சிவாகமம் – (2467)
📖 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
📖 காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
📖 காரிய காரண வாதனைப் பற்றறப்
📖 பாரண வும் உப சாந்தப் பரிசிதே.
🌻 காரியங்கள் உண்டாகும் மாயையின் செயல்பாட்டால்.
🌻 காரணம் உண்டாகும் கடுவெளி செயல்பாட்டால்
🌻 காரிய காரண வாதனை பற்றை அறுத்திட
🌻 பார் என விளக்குவது உபசாந்தப் பரிசு.
✍🏻 பின்குறிப்பு – உபசாந்தம் இறை உணர வாய்ப்பளிக்கும்.