மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2462)
📖 செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
📖 பற்றும் பரோபதி ஏழும் பகருரை
📖 உற்றிடும் காரிய காரணத் தோடற
📖 அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
🌻 மாறிடச் செய்யும் சீவ உபாதியால் திறன் வளரும்
🌻 பற்று கொடுக்கும் பரோ உபாதியால் வளரும் பகருரை
🌻 நிலைத்திடும் காரிய காரணத்தோடு அறவே
🌻 அற்றிட அச்சிவமாகும் அணுவான ஒன்றே.
✍🏻 பின்குறிப்பு – சீவ உபாதி பரோபதி என்ற இரண்டால் வரும் காரிய காரணம் அகற்றிட சிவமாகலாம்.
சிவாகமம் – (2463)
📖 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
📖 வேறாய் நனவு மிகுந்த கனாநனா
📖 ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
📖 பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.
🌻 முப்பத்தாறு தத்துவ காரியத்தால் வரும் உபாதி அகன்றிட
🌻 வேறாய் இருக்கும் நனவு மிகுந்த அறியாத நனவு
🌻 முப்பத்தாறு அகன்ற சுழுத்தி அதில் அடையமுடியாத
🌻 நிலையில் நிலைக்கும் உயிர் தொன்மை பதம் பேசிட அருளும்.
✍🏻 பின்குறிப்பு – தொன்மையான பதத்தால் உபாதிகள் அகற்றலாம்.
சிவாகமம் – (0000)
📖 அகாரம் உயிரே உகாரம் பரமே
📖 மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
📖 சிகாரம் சிவமே வகாரம் பரமே
📖 யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.
சிவாகமம் – (2464)
📖 உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
📖 அயிர்ப்பு அறும் காரணோ பாதி விதிரேகத்து
📖 உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
📖 வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.
🌻 உயிர்க்கு உயிராகி ஒழிவற்று அழிவற்று
🌻 அயிர்ப்பும் அறும் காரண உபாதி செயல் அறிய
🌻 உயிராகும் ஈசன் உபமிதத்தால் அன்றி
🌻 வியக்கத்தக்க ஆணவம் விடுவது இயலாது.
✍🏻 பின்குறிப்பு – ஈசன் அருள் இன்றி ஆணவம் அழியாது.
சிவாகமம் – (2465)
📖 காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
📖 காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
📖 காரிய காரணம் கற்பனை சொற்பதப்
📖 பாரறும் பாழில் பராபரத் தானே.
🌻 காரியம் உண்டானால் கலக்கும் கடும்பசு
🌻 காரணம் உண்டானால் கலக்கும் பரசிவன்
🌻 காரிய காரணம் கற்பனை சொல்பதம் என்ற
🌻 உலக வழக்குகள் பாழாகினால் பராபரத் தானே.
✍🏻 பின்குறிப்பு – உலக வழக்கு என்ற அர்த்தமற்றதை விலக்கினால் பராபரத்தானாகலாம்.
சிவாகமம் – (2466)
📖 முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
📖 பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
📖 சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
📖 சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
🌻 முத்திக்கு ஆதாரம் முதலான ஒன்றின் ஞானமே.
🌻 பத்திக்கு ஆதாரம் பணிந்து உகந்து பற்றுவதே.
🌻 சித்திக்கு ஆதாரம் சிவபரம் தானாக ஆதல்.
🌻 சத்திக்கு வித்து தனது உபசாந்தமே.
✍🏻 பின்குறிப்பு – நிதானமே நிறைவுக்கு வழி.