மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2351)
📖 ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
📖 இருவினை உன்னார் இருமாயை உன்னார்
📖 ஒருவனு மேயுள் உணர்த்திநின் றூட்டி
📖 அருவனு மாகிய ஆதரத் தானே.
🌻 ஒருவனை உணர மறுப்பவர்களே உயிரை உணர மறுப்பவர்கள்.
🌻 இருவினை உள்ளது என ஏற்காதவர்களே இருமாயையில் சிக்குவது இல்லை.
🌻 ஒருவனே என உள்ளே உணர்த்தி நின்று ஊட்டி
🌻 அருவமாக ஆதாரமாக இருக்கிறது.
✍🏻 பின்குறிப்பு – தன்னை மறுப்பவர்களே தலைவனை மறுக்கிறார்கள்.
சிவாகமம் – (2352)
📖 அரன் அன்பர் தானம தாகிச் சிவத்து
📖 வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
📖 உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
📖 திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.
🌻 அரனின் அன்புக்கு உரியவர்கள் தான் அது என ஆகி சிவத்தால்
🌻 வருகின்ற சக்திகளை முறையே வகுத்து
🌻 தகுந்த இடமளித்து பயன்படுத்த என்றும்
🌻 திறன் குறையாமல் சிவா நந்தியாக இருக்கலாம்.
✍🏻 பின்குறிப்பு – சக்தியை போற்றி பாதுகாக்க உயிரோட்டமாக அசை போடலாம்.
சிவாகமம் – (2353)
📖 வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
📖 நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
📖 போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
📖 சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே.
🌻 வேதங்களின் முடிவாக உரைக்கும் பதம் பசு என்ப
🌻 நாத முடிவால் பாசம் விட்டு நிற்பது நன்பதி என்பது.
🌻 போதாந்த தற்பதம் கடந்து போய் இரண்டும் ஐக்கியப்படும்
🌻 சாதாரணம் சிவ சாயுச்சியம் ஆகும்.
✍🏻 பின்குறிப்பு – வீடுபேறு அடைதலை பசு, பதி, சிவசாயுச்சியம் என்பார்கள்.
சிவாகமம் – (2354)
📖 சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
📖 அவம்அவம் ஆகும் அவ்வவ் விரண்டும்
📖 சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால்
📖 நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.
🌻 சிவமாக ஆகுதலே வேதாந்தமும் சித்தாந்தமும் ஆகும்.
🌻 அவம் அவமாக ஆகும் அந்த இரண்டும் உணர்ந்தால்.
🌻 சிவமாகும் சதாசிவன் செய்து ஒன்றினால்
🌻 புதிதான வேதாந்தம் ஞானசித்தாந்தமே.
✍🏻 பின்குறிப்பு – அனுபவத்தால் வேதமும் சித்தாந்தமும் புதியதாக இருக்கும்.
சிவாகமம் – (2355)
📖 சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
📖 சித்தாந்தத் தேநிற்போர் முத்தித் தித்தவர்
📖 சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
📖 சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
🌻 சித்தாந்தத்தின் பொருட்டு சீவனுக்கு முக்தி சித்திப்பதால்
🌻 சித்தாந்தத்தில் நிற்போர் முக்தி சித்தித்தவர்.
🌻 சித்தாந்தம் வேதாந்தம் செம்பொருள் என்பதால்
🌻 இவைகள் சிவனையே காட்டும்.
✍🏻 பின்குறிப்பு – சித்தாந்தம் சிவனை வெளிப்படுத்தும்.
சிவாகமம் – (2356)
📖 சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
📖 அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
📖 நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
📖 தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.
🌻 சிவனான இறையை பரமான இந்த அண்டத்தில் உயிரான சீவனுள் காட்டும்
🌻 மாறுபடாத வேதாந்த சித்தாந்தம் ஆனால்
🌻 புதிதான அவத்தையில் ஞானம் சிவமாம்
🌻 பொறுப்புடன் ஆராய்ந்து உணர்ந்தவர் தத்துவத்தாரே.
✍🏻 பின்குறிப்பு – உணர்ந்தவர் உணர்த்துவதே தத்துவம்.
சிவாகமம் – (2357)
📖 தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
📖 தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
📖 தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
📖 தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.
🌻 தத்துவம் ஆகும் அசைவற்றதும் அசைவுள்ளதும்.
🌻 தத்துவம் ஆகும் விந்து, நாதம். சதாசிவம்.
🌻 தத்துவம் ஆகும் சீவன் தனது இருப்பிடம்.
🌻 தத்துவம் ஆகும் சிவ சாயுச்சியமே.
✍🏻 பின்குறிப்பு – உள்ளது தத்துவமாக விளக்கப்பட்டுள்ளது.