மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2346)
📖 வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
📖 போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
📖 நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
📖 மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.
🌻 வேத முடிவு, சித்தாந்த முடிவு, வேறுபாடு இல்லாத முத்திரை,
🌻 போதனை கடந்த ஞானம், யோக முடிவு, பொதுஞேயமான
🌻 நாதாந்த முடிவு கொண்டு வரும் ஆனந்தம் தலைமேல் வைத்து உரிமை கொண்டாட முடியும்
🌻 முழுமையான முடிவை தரும் முத்திரை என ஆகும் மோனத்தில் மூழ்கவே.
✍🏻 பின்குறிப்பு – அமைதியே நிலையான ஆனந்தம் தரும்.
சிவாகமம் – (2347)
📖 வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட
📖 நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
📖 மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
📖 போதாந்த தற்பதம் போமசி என்பவே.
🌻 வேதங்களை படித்திருக்கிறேன் என்ற உபாதியை மேலே எழ விடாமல் இருக்க வேண்டும்.
🌻 நாதாந்தம் பெற்றதால் கொண்ட பாசத்தை விட நல்லதாம்
🌻 என்ற மீதமுள்ள காரணமும் கழிய மெய்பரனை
🌻 அடைய போதாந்த தற்பதங்கள் அழியும்.
✍🏻 பின்குறிப்பு – அறிந்தேன் என்ற ஆணவம் தவிர்க்க வேண்டும்.