மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லாரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2315)
📖 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
📖 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
📖 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
📖 தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
🌻 தன்னை அறிந்தால் தனக்கு ஒரு கெடுதல் இல்லாமல் போகும்.
🌻 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
🌻 தன்னை அறியும் அறிவை அறிந்த பின்னர்
🌻 தன்னை தான் வாழ்த்தவும் போற்றவும் செய்ய இருக்கிறான்.
✍🏻 பின்குறிப்பு – தன்னை அறிந்தவர் கேடு அற்றவர்.
சிவாகமம் – (2316)
📖 அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
📖 சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
📖 சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
📖 பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.
🌻 தன்னை அறிந்தவர் இருக்கும் இடம் எங்கேயோ அங்கே பலமான தேவர்கள் எல்லாம் தொழுதிட
🌻 சிங்காசனத்தே சிவன் இருந்தானென்று
🌻 சங்கு கோர்த்த வளையமும் சிலம்பும் சரேலெனப்
🌻 பொங்கும் குழலியும் போற்றி என போற்றினார்கள்.
✍🏻 பின்குறிப்பு – தன்னை அறிந்தவரை யாவரும் போற்றுவார்கள்.
சிவாகமம் – (2317)
📖 அறிவு வடிவென்று அறியாத என்னை
📖 அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
📖 அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
📖 அறிவு வடிவென்று அருந்திருந் தானே.
🌻 அறிவு என்பது வடிவம் என்று அறியாத என்னை
🌻 அறிவு வடிவென்று அருளுடன் உணரச் செய்தான் நந்தி.
🌻 அறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே
🌻 அறிவு வடிவென்று அறிய இருந்தேன்.
✍🏻 பின்குறிப்பு – அறிவு வடிவம் கொண்டு செயல்படுகிறது.
சிவாகமம் – (2318)
📖 அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
📖 அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
📖 அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
📖 அறைகின் றனமறை ஈறுகள் தாமே.
🌻 அறிவுக்கு அழிவில்லை என்பதால் ஆக்கப்படும் பொருள்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைக்கின்றன. ஆனால் அறிவு செய்யப்பட்டது இல்லை.
🌻 அறிவை அறிவதற்கு அறிவே ஆதாரம் மற்றொரு ஆதாரம் இல்லை.
🌻 அறிவே அறிவை அறிகின்றது என
🌻 மறைநூல்கள் முடிவு பகர்கின்றன.
✍🏻 பின்குறிப்பு – அறிவை அறிவால் மட்டுமே அறியமுடியும்.