மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2364)
📖 மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
📖 சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன
📖 அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
📖 துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.
🌻 சூழ்ந்த சோகமாய் மாமறையாளர்களுக்கு தமது
🌻 சென்னி அது தான் சிவயோகமாம் இது எப்படி என வினவுகின்றார்கள்.
🌻 அது சித்தாந்த மாமறையாய் பொருள் உணர்த்த
🌻 நுட்பமான நூலென தோன்றுமே.
✍🏻 பின்குறிப்பு – சிவயோகம் பற்றி அறியாதவர்கள் சோகமாகிப் போகின்றார்கள் மாமறை படித்துவிட்ட ஆணவத்தால்.
சிவாகமம் – (2365)
📖 முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப்
📖 பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
📖 முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
📖 அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.
🌻 முதலாகும் வேதம், முழுமையான ஆகமம்
🌻 என இரண்டையும் அகத்தின் பதியாகிய ஈசன் பகர்ந்தது.
🌻 முழுமை பகர்ந்த வேதத்தை அமர்ந்து முறைமுறையாக
🌻 அதிகாதியாக விளக்கியது வேதாந்த சித்தாந்தம் ஆகவே.
✍🏻 பின்குறிப்பு – விளக்கமாக எழுதப்பட்டதே ஆகமம்.
சிவாகமம் – (2366)
📖 அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
📖 அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
📖 அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
📖 அறிவு பதியில் பிறப்பறுந் தானே.
🌻 அறிவு அறிவு எனப்படும் அறிவும் ஆதாரமற்ற அனாதியே.
🌻 அறிவுக்கு அறிவாகும் பதியும் அனாதியே.
🌻 அறிவினைக் கட்டிய பாசம் அனாதியே.
🌻 அறிவு பதியை அறிந்து பிறப்பறுக்கும்.
✍🏻 பின்குறிப்பு – அறிவைக் கொண்டு பதியை அறிந்தால் பிறப்பு அறுபடும்.
பதி பசு பாசம் வேறின்மை
சிவாகமம் – (2367)
📖 பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
📖 பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
📖 பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
📖 பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பதியின் அருளால் பிரிந்த பசுக்கள் பலகோடி. படைப்புகளை முதலாக கொண்டு
🌻 பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு.
🌻 பசுத் தன்மை நீக்கி பாசத்தை அறுத்தால்
🌻 பசுக்கள் பதியை பற்றி விடாமல் இருக்கும்.
✍🏻 பின்குறிப்பு – பாசம் அறுக்க பசுத் தன்மை அறுபடும்.
சிவாகமம் – (2368)
📖 கிடைக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
📖 நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
📖 தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
📖 குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
🌻 இருக்கும் இருப்பில் உண்டாகும் பயன் மூன்று.
🌻 அப்படி நடக்கும் காலத்தில் ஞானத்தை நாடோறும் நோக்கி
🌻 அடுத்து அடுத்து தொடக்கம் வேண்டும் என்பதை துறந்து தொழுமின் தொழுதால்
🌻 மலைக் குன்றில் இட்ட விளக்குபோல் வெளிச்சம் ஆகும்.
✍🏻 பின்குறிப்பு – ஆசைகளை வளர்க்காமல் வாழ்ந்தால் இறையை உணரலாம்.
சிவாகமம் – (2369)
📖 பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
📖 நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
📖 கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
📖 வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.
🌻 பாசமுடன் செயல்படுபவனை படர்சடை கொண்ட நந்தியை
🌻 நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தாலும்
🌻 அச்சமுடன் கவனம் பெருக குறிப்பறிவது எவ்வண்ணம் என்றால்
🌻 வாசமுடன் செய்யும் பாசத்தில் வைப்பதும் போல் வைக்க வேண்டும்.
✍🏻 பின்குறிப்பு – உபதேசப் பொருள் மேல் கவனம் பாசமுடன் வைக்க வேண்டும்.
சிவாகமம் – (2370)
📖 விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
📖 விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
📖 சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
📖 சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
🌻 தனிந்து விட்ட விடம் மேலும் ஏறாதபடி வேறாகி
🌻 கடந்து விட்ட பசுபாசம் மெய்கண்டவன் தங்க மாட்டான்.
🌻 கற்றுத் தந்த கேவலத்தை அறியும் சகலத்தை
🌻 சுட்டும் நனவில் அதீதத்துள் தோன்றும்.
✍🏻 பின்குறிப்பு – விடம் முறிந்துவிட்டதைப் போல் மெய்கண்டால் பசுபாசம் கடக்கலாம்.
சிவாகமம் – (2371)
📖 நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
📖 நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
📖 நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
📖 நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.
🌻 நாடி அடைய விரும்பும் பதியுடன் நல்ல பசு பாசமும்
🌻 நீண்டு வளரும் என்றும் நிலைக்கும் நித்தன் நிலையை அறிபவர் இல்லை.
🌻 நித்தம் நீளும் பசுபாச நீக்கமும்
🌻 நாடிய சைவருக்கு நந்தி அளித்ததே.
✍🏻 பின்குறிப்பு – சைவருக்கு நந்தி அருள்வதே பசு பாச நீக்கம்.
சிவாகமம் – (2372)
📖 ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
📖 ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
📖 ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
📖 ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
🌻 ஆராய பதியை அருட் சிவ லிங்கமாக உணரலாம்.
🌻 ஆராய பசுவும் சிறந்த காளையாய் நிற்கும்.
🌻 ஆராய பலிபீடம் பாசம் என விளங்கும்.
🌻 ஆராய அரன் நிலை அடையலாம் ஆய்ந்துக் கொள்பவர்களுக்கே.
✍🏻 பின்குறிப்பு – லிங்கம் காளை பலிபீடம் முறையே பதி பசு பாசம் என உருவகம் செய்யப்பட்டுள்ளது.
சிவாகமம் – (2373)
📖 பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
📖 பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
📖 பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
📖 பதிபசு பாசம் பயில நிலாவே.
🌻 பதி பசு பாசம் என நித்தம் பயில்வோர்க்கு செய்து
🌻 பதி பசு பாசம் என பகர்வோர்க்கு தொடராக்கி
🌻 பதி பசு பாசம் என்பதை பற்று இல்லாமல் நீக்கும்
🌻 பதி பசு பாசம் என பயில நிற்காதே.
✍🏻 பின்குறிப்பு – பதி பசு பாசம் பயில உண்மை அறிந்து பொய் நில்லாமல் விலகும்.