சரகலை என்றால் என்ன?
🌹 வாசி யோகம் அல்லது சுவாச பயிற்சி என்பதற்கு பெயர் சரக்கலை.
🌹 சரம் என்றால் மாலை.
🌹 ஒரு நூலில் பூவை வைத்து கோர்த்தால் அது மாலையாக மாறிவிடும்.
🌹 அதுபோல ஒவ்வொரு சுவாசத்தையும் மலராக மாற்றி அந்த மலர்களை ஒழுங்குபடுத்தினால் அதன் பெயர் சரம்.
🌹 சரக்கலை என்றால் சுவாசத்தை சீராக்கி அதை ஒழுக்கமாக ஓட விடுவது.
🌹 இந்த சரக்கலை அல்லது வாசி யோகம் அல்லது சுவாச பயிற்சி என்பது ரகசியமாக இருக்க வேண்டும்.
🌹 அது ரகசியமாக இருப்பது தான் அழகு.
🌹 என்னை எனது அம்மா அப்பா தான் பெற்றிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுடைய உறவு ரகசியமாக இருப்பது தான் அழகு என்பதைப் போல சரக்கலையையும் ரகசியமாக வைத்திருப்பது தான் அழகு.
🌹 அதை நீங்கள் புத்தகத்திலோ அல்லது குருவின் மூலமாகவோ அறிந்திருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக் கொள்வது தான் நல்லது.
🌹 அதனால் சரக்கலை பற்றிய ரகசியத்தை என்னால் சொல்ல முடியாது.
🌹 விரும்புபவர்கள் என்னை ரகசியமாக சந்தித்து தெரிந்து கொள்ளலாம்.
🌹 இதை ஏன் உருவாக்கினார்கள் என்றால் சுவாசத்திற்கும் எண்ணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
🌹 மூக்கை மூடி உங்கள் சுவாசம் வெளியே போய் வர தடை ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் உங்கள் மனம் எண்ணமற்று போய்விடும்.
🌹 மூக்கில் இருந்து கையை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும் மற்ற தேவையற்ற எண்ணங்கள் எதுவும் தோன்றாது.
🌹 அதனால்தான் மனம் எண்ணமற்று இருப்பதற்கும் சுவாசத்திற்கும் சம்பந்தம் இருப்பதை கண்டறிந்து சில சுவாசப் பயிற்சிகளை, சரக்கலையை உருவாக்கியுள்ளார்கள்.
🌹 அதனால் ஒரு நல்ல குருவை சந்தித்து சரக்கலையை கற்று உங்களுடைய சுவாசத்தை நீங்கள் சீர் செய்து கொள்ளலாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025