மனிதனுக்கு விரக்திநிலை ஏன் ஏற்படுகிறது?
🌹 நான் எனக்கு சரியாக இருக்க வேண்டும்.
🌹 நான் என்னுடன் பேசுவதில் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.
🌹 நான் என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
🌹 நான் எனக்காக அழ வேண்டும்.
🌹 நான் எனக்காக சிரிக்க வேண்டும்.
🌹 நான் எனக்காக எல்லாமே செய்கிறேன் என்றால் விரக்தி என்பது ஏற்படவே ஏற்படாது.
🌹 இதையெல்லாம் நான் பிறருக்காக செய்தால் கட்டாயம் விரக்தி நிலை ஏற்படும்.
🌹 என்னுடன் எல்லோரும் ஒத்து இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
அது கணவன், மனைவியாக இருந்தாலும் சரி,
அம்மா, அப்பாவாக இருந்தாலும் சரி,
குரு, சீடனாக இருந்தாலும் சரி,
🌹 அனைவரும் என்னுடன் ஒத்து எனது பாதையில் வருவார்கள் என்று சொல்ல முடியாது.
🌹 பொதுவாக வயதானவர்கள் காமம் சார்ந்து சிந்திக்க முடியவில்லை அல்லது சிந்தித்தாலும் செயல்பட முடியவில்லை என்று விரக்தி அடைந்து விடுவார்கள்.
🌹 ஆனால் காமம் ஒரு விஷயம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது.
🌹 மனிதன், பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் விரக்தி ஆகிறான்.
🌹 அதாவது என்னால் முடியாது என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் ஒரு மனிதன் விரக்தி அடைகிறான். அல்லது விரக்தி ஆவதால் இதை என்னால் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருகிறான்.
🌹 நீங்கள் இருப்பதே சுகம்.
🌹 உங்கள் இருதயம் துடிக்கும் வரை நீங்கள் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
🌹 ஒரு ஒரு முறை நீங்கள் உங்கள் கைகளை தொட்டு (நாடியை) ரசித்துக் கொள்ளுங்கள்.
🌹 யாரோ ஒருவன் எனது இருதயத்தை துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் என்பது உங்களுக்கு புரியவரும்.
🌹 எனக்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் இருந்தாலும் எனது இதயம் துடித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கும் அதை நினைத்து மட்டுமே நீங்கள் கொண்டாடலாம்.
🌹 உங்களுடைய உடல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.அதற்காகவே நீங்கள் அதன் மீது நன்றியோடு இருக்கலாம்.
🌹 உங்களுக்கு நன்றியோடு இருக்க தெரிந்து விட்டால் விரக்தி என்ற வார்த்தைக்கு பொருளே இல்லாமல் ஆகிவிடும்.
🌹 நீங்கள் நன்றியோடு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் விரக்தி என்ற ஒன்றை நீங்கள் சந்திக்கவே மாட்டீர்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025