என்னால் ஏன் ஒரு வேலையை தொடர்ந்து செய்ய முடிவதில்லை?
🌹 என்னால் ஒரு வேலையை ஏன் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் உள்ளே என்னுடைய வேலைக்காரன் (புத்தி) எஜமானாக இருப்பதால் தான்.
🌹 கடவுள் நமக்கு ஒரு வேலைக்காரனை (புத்தியை) கொடுத்து இருக்கிறார். அவன் பல வேலைக்காரனை (புத்தியை) உருவாக்கி விட்டான்.
🌹 அந்த பல வேலைக்காரர்களும் (புத்திகளும்) எஜமானாகி எனக்கு ஆலோசனை சொல்வதால் (புத்தி சொல்வதால்) என்னால் ஒரு வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை.
🌹 அதாவது நீங்கள் கற்றுக் கொண்ட தகவல்கள் (புத்தி) அனைத்தும் உங்களுக்கு எஜமானாகி உங்களை ஆளுமை செய்வதால், இது சரியா? தவறா? என்ற கேள்வி ஏற்பட்டு என்னால் ஒரு வேலையை தொடர்ந்து செய்ய முடியாமல் போகிறது.
🌹 வேலைக்காரன் (புத்தி) எஜமான் ஆகிவிட்டால் என்னை நான் இழந்து விடுகிறேன்.
🌹 நான் ஏதோ ஒரு மகாத்மாவை கற்றுக்கொண்டு ஒரு வேலைக்காரனை (புத்தியை) உருவாக்குகிறேன்.அந்த வேலைக்காரன் நான் சிறப்பாக வாழ்வதற்கு உதவுவான் என்று பார்த்தால்,அவன் எஜமானாகி அந்த மகானைப் போலவே நான் வாழ வேண்டும் என்று ஆளுமை செய்கிறான் இதனால் நான் என்னை இழந்து வேலைக்காரனுக்கு வேலைக்காரனாகி விடுகிறேன்.
🌹 குரு என்பவன் ஒரு வேலைக்காரன். அவர் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கிறார். நீங்கள் தான் எஜமானாக இருந்து குரு நிர்ணயித்த கூலியை கொடுத்து அவரிடம் கற்றுக்கொண்டு சிறப்பாக வாழ வேண்டும்.
🌹 குருவை எஜமான் ஆக்கி தலையில் வைத்துக்கொண்டு நீங்கள் அவருடைய வேலைக்காரன் ஆகிவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கையை அவர் சிறப்பாக வாழ்வார்.
🌹 உங்களுடைய வாழ்க்கை நீங்கள் தான் சிறப்பாக வாழ வேண்டும்.
🌹 நான் ஒரு பாட்டை ரசித்துப் பாடுகிறேன் என்றால் அந்தப் பாடலாசிரியர் எனக்கான ஒரு வேலைக்காரன்.
🌹 நான் கொண்டாடுவதற்காக கூலிக்கு பாட்டு எழுதிய வேலைக்காரர் அவர்.
🌹 அந்தப் பாடலை கேட்காமல் என்னால் தூங்க முடியவில்லை என்றால் அந்தப் பாடல் உங்களுக்கு எஜமான் ஆகிவிட்டது என்று தான் அர்த்தம்.
🌹 மது ,சிகரெட் எல்லாம் கூட உங்களுக்கு எஜமான் ஆகிவிட்டது.
🌹 உங்களுடைய கணவன், மனைவி, குழந்தைகள் கூட உங்களுக்கு எஜமான் ஆகிவிட்டார்கள்.
🌹 நீங்கள் எங்கே ? என்பது தான் என்னுடைய கேள்வி.
🌹 படகு உன்னை கரை சேர்க்க உதவும் ஆனால் அது இருக்க வேண்டிய இடம் ஆற்றில் தான்.
🌹 செருப்பை தலை மீது வைத்துக் கொண்டு நான் நிமிர்ந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
🌹 தலையில் ஒன்றுமே இல்லாதவனால் குனியவும் முடியும் நிமிரவும் முடியும்.
🌹 ஆனால் தலையில் திமிரையும், மத சடங்கையும், ஜாதி வெறியையும், ஆண், பெண் என்ற திமிரையும், ஏழை பணக்காரன் என்ற திமிரையும் வைத்துக் கொண்டு திரிந்தால் எப்படி என்னால் ஒரு வேலையை செய்ய முடியும்.
🌹 நான் ஒரு செயலை செய்யும் போது அந்த செயலோடு ஒன்றி விட வேண்டும். இல்லை என்றால் அந்த செயலை செய்யும் போதே வேலைக்காரன்(புத்தி) எஜமானாக பேச ஆரம்பித்து விடுவான்.
🌹 சாப்பாடு சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனம் இல்லை என்றால் , இந்த சாப்பாட்டை விட அம்மா செய்யும் சாப்பாடு தான் நன்றாக இருக்கும் என்று வேலைக்காரன்(புத்தி) பேச ஆரம்பித்து விடுவான்.
🌹 அதனால் என்னால் ஒரு செயலை செய்ய முடியாததற்கு காரணம் நான் எஜமானாக இல்லாததால் தான்.
🌹 உங்களைவிட தலைசிறந்த ஒரு எஜமான் இருக்கிறான் அவன் பெயர் பணம். நீங்கள் அதற்காக மட்டும்தான் பொறுப்பாக செயல்பட்டு எஜமான் ஆகிறீர்கள்.
🌹 என்னுடைய தலை சிறந்த எஜமான் கடவுள் என்றால்,வாழ்க்கை ஒரு அற்ப விளையாட்டு என்பது புரிந்துவிடும். அப்போது நான் எந்த செயல் செய்தாலும் அதனுடன் ஒன்றி எஜமானாகத்தான் இருப்பேன்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025