மனம் நித்தம் நித்தம் மாறிக்கொண்டிருப்பது சரியா?
🌹 மாறுவது மனம் என்று சொல்வதுண்டு.
🌹 மனம் நித்தம் நித்தம் மாறிக்கொண்டே இருப்பது நல்லது தான்.
🌹 என்னுடைய கணவன், மனைவி, நண்பன், அக்கா, தங்கை, அல்லது வேறு யாரிடம் பேசும்போதும் மனம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
🌹 இடம் பொருள் ஏவல் அறிந்து மனம் மாறிக்கொண்டே இருக்கிறது.
🌹 அதாவது பச்சோந்தி மாதிரி தான் மனம் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால்
அப்படித்தான் இருக்க வேண்டும்.
🌹 மனம் நித்தம் நித்தம் Update ஆகி கொண்டே (தன்னைப் புதுப்பித்துக் கொண்டே) தான் இருக்கும்.
🌹 ஆனால், மனம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் போது எனக்கு எதிராகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.
🌹 அதனால் நீங்களே உங்கள் மனதுடன் பேசி ஏதேனும் தவறாக மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அதை சரி செய்து கொள்ளுங்கள்.
🌹 உங்களுடைய Phone மட்டும் Updated கிடையாது. உங்களுடைய மனமும் updated தான்.
🌹 நீங்கள் உங்கள் மனதை அதிகபட்சமாக Update செய்து போதும், போதும் என்ற நிலைக்குச் சென்று, சமாதி சாதித்து வாழ்ந்து விட்டு, கொண்டாடி விட்டுச் செல்லுங்கள்.
🌹 அதனால் மனம் மாற வேண்டும்.
🌹 மனம் மாறவில்லை என்றால், வளர்ச்சியில்லை.
🌹 வளர்ச்சியில்லை என்றால், வாழ்க்கையே இல்லை.
🌹 வாழ்க்கையை, வாழவில்லை என்றால் நிறைவே இல்லை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025