எனக்குள் ஏற்படும் இரட்டை பிரிவை தடுப்பது எப்படி?
🌹 எனக்குள் ஏற்படும் இரட்டை பிரிவை தடுப்பது பெரிய ஆபத்து.
🌹 பிரட்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் எதிர்மறை எண்ணங்களை எழுப்பி தான் ஆக வேண்டும்.
🌹 சர்க்கரை அதிகமாக போட்டால் COFFE என்னவாகும் என்று யோசித்தால் தான், என்னால் COFFE – யை சரியாக போட முடியும்.
🌹 இரண்டாக இருந்து பழகி, சரியாகி அது ஒருநாள் ஒன்றாக மாறிவிடும்.
🌹 இதனால் தான் குரு விசேஷம். குரு ஒன்றாகி எதிராளியை இரண்டாவது ஆக வைத்திருக்கிறார்.
🌹 குரு ஒன்றானதால் அவருக்கு கேள்வி எழும்பாது.அதனால் அவர் எதிராளியை இரண்டாவதாக ஒரு சந்தர்ப்பம் ஆக்கி அவருடைய கேள்விக்கு பதில் அளித்து தன்னில் பேசிக்கொள்கிறார்.
🌹 முதலில் நீங்கள் இரண்டாக இருந்து பேசி முடிவுக்கு வந்தால் தான் ஒன்றாக முடியும்.
🌹 அப்படி ஒன்றாகி விட்டீர்கள் என்றால் பேச மாட்டீர்கள், அமைதியாகவும் சந்தோசமாகவும் இருப்பீர்கள்.
🌹 நீங்கள் தூங்கும் போது ஒன்றுதான் எழுந்த பிறகு தான் இரண்டு.
🌹 தூங்கும்போது இருந்த அமைதியை, நிர்மலத்தை, சாந்தத்தை, ஸ்வரூபத்தை, மௌனத்தை அல்லது அந்த உண்மையை விட்டு ஏன் வெளியே வந்தேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
🌹 வெளியே வந்தால் தான் என்னால் இந்த சமூகத்தில் வாழ முடியும்.
🌹 ஒன்று அமைதி (0) இரண்டாவது தோற்றம் (1)
🌹 (0), (1) இல்லையென்றால் எதையுமே செய்ய முடியாது.
🌹 நீங்கள் இரண்டாக இருப்பது ஒரு வரம்.
🌹 அந்த இரண்டாவதை அமைதியாக்குவது தான் யோகம் அல்லது சமாதி.
🌹 நீங்கள் ஒன்றாக வேண்டும் என்றால் ஒன்றான மனிதரிடம் தான் பழக வேண்டும்
🌹 நான் இரண்டாக இருக்க வேண்டும். ஆனால், அந்த இரண்டாவதாக உள்ளது எனக்கு அடங்கியிருக்க வேண்டும்.
எனக்கு சரியாக இருக்க வேண்டும்.
என்னுடைய வேலைக்காரனை போல இருக்க வேண்டும்.
🌹 நான் விழிப்பு வந்தவுடன் எழுந்து விட்டேன் என்றால் வேலைக்காரன் எனக்கு வேலைக்காரனாகத்தான் இருக்கிறான் என்று அர்த்தம். ஆனால் விழிப்பு வந்தும் எழும்பி வேலைக்காரன் சொல்வதைக் கேட்டு தூங்கி விட்டேன் என்றால், வேலைக்காரன் உங்களுக்கு எஜமானாக இருக்கிறான் என்று அர்த்தம்.
🌹 கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வேலைக்காரரை கொடுத்திருக்கிறான்.
🌹 நான் எந்த இடத்தில் எந்த மொழியில் பிறக்கிறேனோ அந்த மாதிரியான வேலைக்காரன் எனக்கு அடிமையாக இருக்கிறான்.
🌹 ஆனால் எந்த மனிதனும் எங்கு பிறந்திருந்தாலும், எந்த மொழியை கற்று இருந்தாலும் அனைவரும் தூங்கும் போது ஒன்றுதான்.
🌹 வேலைக்காரன் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தாலும் நான் நிறுத்து என்றால் நிறுத்தி விட வேண்டும் அப்படி இருந்தால் தான் வேலைக்காரன் வேலைக்காரனாக இருக்கிறான் என்று அர்த்தம்.
🌹 வேலைக்காரனை வேலைக்காரனாக வைத்திருக்கும் எஜமானுக்கு பெயர் தான் ஞானி.
🌹 குரு உங்களுக்கு ஒரு வேலைக்காரன் உங்கள் தேரை ஓட்டுபவன் அதனால் தான் கிருஷ்ண பரமாத்மா கதை சொல்லி வைத்திருக்கிறார்கள்.
🌹 உங்களுடைய கேள்விக்கான பதில் சொல்ல அவனை தேரோட்டியாக (வேலைக்காரனாக) இறைவன் கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறான்.
🌹 ஏனென்றால் நீங்கள் அவனுக்கு ஒரு கூலி கொடுக்கிறீர்கள் அந்த கூலிக்கு மதி மயங்கி உங்களுக்கு அவன் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
🌹 அந்த விசேஷமான வேலைக்காரனை சரியாக வேலை வாங்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025