சிலர் உங்களிடம் வருபவர்களை எதற்காக மடை மாற்றம் செய்கிறார்கள்?
🌹 என்னை ஒரு மனிதன் பார்க்கிறான்.
🌹 இவர் கொண்டாட்டமாக இருக்கிறார்.நன்றாக வாழ்கிறார் என்று வெறுப்படைந்திருக்கலாம் அல்லது அவருக்கான இடத்தை நான் கொடுக்கவில்லை என்று நினைத்திருக்கலாம்.
🌹 அவரை நான் மதிக்கவில்லை கொண்டாடவில்லை என்று நினைத்திருக்கலாம்.
🌹 அதனால் என்னிடத்திலிருந்து மற்றவர்களை விலக்கி அவர்களுக்கு உதவ நினைத்திருக்கலாம்.
🌹 அதை மடைமாற்றம் செய்வதென்று சொல்ல முடியாது.
🌹 கடவுள் களை பறிப்பதற்கான மனிதர்களை உருவாக்கி இருக்கிறான் என்று தான் சொல்ல முடியும்.
🌹 என்னிடத்தில் இருப்பதற்கு தகுதியற்ற மனிதர்களை அவரால் தேர்ந்தெடுத்து வெளியேற்ற முடியும். அதற்கான வழிகாட்டி அவர்.
🌹 நான் ஆலமரமாக வளர்ந்திருக்கிறேன் என்றால் அனைத்து உயிரினங்களும் என்னிடத்தில் இளைப்பாரி, கொண்டாடி, குடும்பமாக வாழ்ந்து கொள்ளலாம்.
🌹 என்னிடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
🌹 நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு என்னால் நன்றாக இல்லாமல் இருக்க முடியுமா??
🌹 நான் நன்றாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையை விட நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் தான் நீங்கள் அக்கறையோடு இருக்க வேண்டும்
🌹 யாராவது என்னிடம் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொல்லி அதை நீங்கள் ஒத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களுடைய மனநிலை தான் சரியில்லை என்று அர்த்தம்.
🌹 சொல்கிற அந்த மனிதரின் மனநிலை சரியாகத்தான் இருந்திருக்கும் .
🌹 அவருக்கும் எனக்கும் ஏதாவது ஒரு ஒப்பந்தம் இருந்திருக்கலாம் அவர் எதிர்பார்த்த மாதிரி நான் இல்லாமல் இருந்திருக்கலாம்.
🌹 அதனால் அவர்தான் என்று இல்லை யார் மடைமாற்றம் செய்தாலும், அதை ஒத்துக் கொண்டு மாறக்கூடிய மனிதர்கள் தான் என்னிடத்திலிருந்து விலகிச் செல்வார்கள்.
🌹 நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்து என்னை குருவாக உயர்த்திப் பார்ப்பது உங்களுக்கு சரி என்ற பட்சத்தில் யாரை கண்டும் அச்சுரத் தேவையில்லை.
🌹 என்னை விட சிறந்த மனிதன் இருக்கிறார் என்றால் நீங்கள் எனக்கு அவரை அறிமுகம் செய்யலாம்.
🌹 என்னை விட ஒரு சிறந்த மனிதனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.நான் சிறப்பானவன் என்ற திமிரினால் அல்ல.
🌹 நான் என்னை விட சிறப்பாக ஒருவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் எனக்கு அந்த ஆர்வம் இருக்கிறது
🌹 என்னுடைய தேவை நீங்கள் என்னிடத்தில் இருக்க வேண்டும் என்பதல்ல நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டமாகவும், சரியாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதில் தான்.
🌹 உங்களுடைய மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும், சரியையும், உண்மையையும் இழக்க வைக்க யார் முயற்சித்தாலும் நேரான வாலை வளைத்தாலும் அது மீண்டும் தன் நிலைக்கே வந்து நிற்பதை போல நீங்களும் உங்களுடைய நிலைக்கு திரும்பிச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025