7️⃣6️⃣ 📖 தனக்கு உரிமையானதைப் பெற 📖
📖 குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
📖 மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
📖 வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
📖 பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.
7️⃣7️⃣ 📖 பகை அச்சம் நீங்க 📖
📖 பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
📖 உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
📖 வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
📖 செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.
7️⃣8️⃣ 📖 சகல செல்வங்களையும் அடைய 📖
📖 செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்
📖 அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்
📖 கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
📖 துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.
7️⃣9️⃣ 📖 கட்டுகளில் இருந்து விடுபட 📖
📖 விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
📖 வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
📖 பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
📖 குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
8️⃣0️⃣ 📖 பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட 📖
📖 கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
📖 ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
📖 காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
📖 ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.
8️⃣1️⃣ 📖 நன்னடத்தை உண்டாக 📖
📖 அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
📖 வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
📖 இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
📖 பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.
8️⃣2️⃣ 📖 மன ஒருமைப்பாடு அடைய 📖
📖 அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
📖 ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
📖 களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
📖 வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.
8️⃣3️⃣ 📖 ஏவலர் பலர் உண்டாக 📖
📖 விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
📖 இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
📖 பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
📖 உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.
8️⃣4️⃣ 📖 சங்கடங்கள் தீர 📖
📖 உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
📖 சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
📖 இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
📖 படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
8️⃣5️⃣ 📖 துன்பங்கள் நீங்க 📖
📖 பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு
📖 ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்
📖 தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,
📖 வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.
8️⃣6️⃣ 📖 ஆயுத பயம் நீங்க 📖
📖 மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
📖 காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
📖 வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
📖 பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.
8️⃣7️⃣ 📖 செயற்கரிய செய்து புகழ் பெற 📖
📖 மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
📖 விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
📖 அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
📖 பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.
8️⃣8️⃣ 📖 எப்போதும் அம்பிகை அருள் பெற 📖
📖 பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்
📖 தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்
📖 புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்
📖 சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!
8️⃣9️⃣ 📖 யோக சித்தி பெற 📖
📖 சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
📖 துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
📖 உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு
📖 மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.
9️⃣0️⃣ 📖 கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க 📖
📖 வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
📖 இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
📖 பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
📖 விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
9️⃣1️⃣ 📖 அரசாங்கச் செயலில் வெற்றி பெற 📖
📖 மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
📖 புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
📖 சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
📖 பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
9️⃣2️⃣ 📖 மனநிலை பக்குவமடைய 📖
📖 பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
📖 இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
📖 மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
📖 முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.
9️⃣3️⃣📖 உள்ளத்தில் ஒளி உண்டாக 📖
📖 நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு
📖 முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த
📖 வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்
📖 மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
9️⃣4️⃣ 📖 மனநிலை தூய்மையாக 📖
📖 விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
📖 அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
📖 சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
📖 தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.
9️⃣5️⃣ 📖 மன உறுதி பெற 📖
📖 நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
📖 ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
📖 அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
📖 குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!
9️⃣6️⃣ 📖 எங்கும் பெருமை பெற 📖
📖 கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்
📖 யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
📖 சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்
📖 ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.
9️⃣7️⃣ 📖 புகழும் அறமும் வளர 📖
📖 ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
📖 போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
📖 காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
📖 சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
9️⃣8️⃣ 📖 வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற 📖
📖 தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
📖 கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?
📖 மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
📖 பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே.
9️⃣9️⃣ 📖 அருள் உணர்வு வளர 📖
📖 குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
📖 மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
📖 வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
📖 கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.
1️⃣0️⃣0️⃣ 📖 அம்பிகையை மனத்தில் காண 📖
📖 குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
📖 கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
📖 விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
📖 உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.
1️⃣0️⃣1️⃣ 📖 நூற்பயன் 📖
📖 ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
📖 பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
📖 காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
📖 சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025