4️⃣6️⃣ 📖 நல்நடத்தையோடு வாழ 📖
📖 வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
📖 பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
📖 கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
📖 மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!
4️⃣7️⃣ 📖 யோகநிலை அடைய 📖
📖 வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
📖 வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
📖 ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
📖 சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
4️⃣8️⃣ 📖 உடல் பற்று நீங்க 📖
📖 சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
📖 படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
📖 இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
📖 குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
4️⃣9️⃣ 📖 மரணத் துன்பம் இல்லாதிருக்க 📖
📖 குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
📖 வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
📖 அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
📖 நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
5️⃣0️⃣ 📖 அம்பிகையை நேரில் காண 📖
📖 நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
📖 சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
📖 வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
📖 ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
5️⃣1️⃣ 📖 மோகம் நீங்க 📖
📖 அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
📖 முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
📖 சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
📖 மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
5️⃣2️⃣ 📖 பெருஞ்செல்வம் அடைய 📖
📖 வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
📖 பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
📖 ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
📖 செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
5️⃣3️⃣ 📖 பொய்யுணர்வு நீங்க 📖
📖 சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
📖 பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
📖 கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
📖 தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.
5️⃣4️⃣ 📖 கடன் தீர 📖
📖 இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
📖 நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
📖 கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
📖 செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
5️⃣5️⃣ 📖 மோனநிலை எய்த 📖
📖 மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
📖 அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
📖 முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
📖 உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.
5️⃣6️⃣ 📖 யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக 📖
📖 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
📖 நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
📖 பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
📖 அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
5️⃣7️⃣ 📖 வறுமை ஒழிய 📖
📖 ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
📖 உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
📖 செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
📖 மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.
5️⃣8️⃣ 📖 மனஅமைதி பெற 📖
📖 அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
📖 தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
📖 கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
📖 சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.
5️⃣9️⃣ 📖 பிள்ளைகள் நல்லவர்களாக வளர 📖
📖 தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
📖 நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
📖 அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
📖 பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
6️⃣0️⃣ 📖 மெய்யுணர்வு பெற 📖
📖 பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
📖 மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
📖 மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
📖 நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?
6️⃣1️⃣ 📖 மாயையை வெல்ல 📖
📖 நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
📖 நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
📖 பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
📖 தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.
6️⃣2️⃣ 📖 எத்தகைய அச்சமும் அகல 📖
📖 தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
📖 வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
📖 கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
📖 செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.
6️⃣3️⃣ 📖 அறிவு தெளிவோடு இருக்க 📖
📖 தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
📖 கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
📖 ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
📖 வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
6️⃣4️⃣ 📖 பக்தி பெருக 📖
📖 வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
📖 பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
📖 பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
📖 காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
6️⃣5️⃣ 📖 ஆண்மகப்பேறு அடைய 📖
📖 ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
📖 தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
📖 முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
📖 மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!
6️⃣6️⃣ 📖 கவிஞராக 📖
📖 வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
📖 பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
📖 வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
📖 சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.
6️⃣7️⃣ 📖 பகைவர்கள் அழிய 📖
📖 தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
📖 மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
📖 கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
📖 பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.
6️⃣8️⃣ 📖 நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக 📖
📖 பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
📖 ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
📖 சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
📖 சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.
6️⃣9️⃣ 📖 சகல சௌபாக்கியங்களும் அடைய 📖
📖 தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
📖 மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
📖 இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
📖 கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
7️⃣0️⃣ 📖 நுண் கலைகளில் சித்தி பெற 📖
📖 கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
📖 பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
📖 மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
📖 பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
7️⃣1️⃣ 📖 மனக்குறைகள் தீர 📖
📖 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
📖 பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
📖 குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
📖 இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!
7️⃣2️⃣ 📖 பிறவிப் பிணி தீர 📖
📖 என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
📖 நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
📖 மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
📖 தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.
7️⃣3️⃣ 📖 குழந்தைப் பேறு உண்டாக 📖
📖 தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
📖 யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
📖 சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
📖 நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.
7️⃣4️⃣ 📖 தொழிலில் மேன்மை அடைய 📖
📖 நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
📖 அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
📖 பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
📖 சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
7️⃣5️⃣ 📖 விதியை வெல்ல 📖
📖 தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
📖 மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
📖 பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
📖 கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : JULY 2025