மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
பிள்ளையை சரியாக வளர்ப்பது
தாயின் பொறுப்பா?தந்தையின் பொறுப்பா?
🌹 எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் குழந்தையை வளர்க்கவில்லை.
🌹 தாய் தந்தை இல்லாத குழந்தைகளும் வளரத்தான் செய்கிறது.
🌹 அவர்கள் குழந்தைக்கு உணவு கொடுக்கிறார்கள்.
🌹 அது வளர்கிறது.
🌹 அல்லது கடவுளால் வளர்க்கப்படுகிறது.
🌹 என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 எந்த ஒரு பெற்றோரும் குழந்தைக்கு உணவு மட்டும் கொடுப்பதில்லை.
🌹 தன்னுடைய புரிதலையும் சேர்த்து திணிக்கிறார்கள்.
🌹 எந்த குழந்தையும் பெற்றோர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வளர்வதில்லை.
🌹 தன்னை சுற்றி உள்ளவர்களால் கற்று கொண்டு அதில் ஒரு முடிவுக்கு வந்து,
🌹 முடிவுக்கு வந்த புரிதலை கொண்டு வாழ்கிறது.
🌹 அப்படித்தான் ஒவ்வொரு பெற்றோர்களும் உருவாகியிருக்கிறார்கள்.
🌹 அவர்களுடைய குழந்தையும் அப்படித்தான் உருவாகும்.
🌹 அந்த குழந்தைக்கு எது சிறந்தது என்று புரிகிறதோ அப்படித்தான் அது வாழ நினைக்கும்.
🌹 சோம்பேறி தனமாக வாழ்வதே சிறந்தது என்று புரிந்து கொண்ட குழந்தை சோம்பேறித்தனமாக தான் இருக்கும்.
🌹 தன்னை கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வைத்துக் கொள்வதேத சிறந்தது என்று புரிந்த குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக தான் இருக்கும்.
🌹 அதனால் எந்த குழந்தையும் தன் விருப்பத்தில் தன் தேவைக்கு வாழ்ந்தால்,
🌹 எந்தத் தாயும் அல்லது தகப்பனும் நான்தான் வளர்த்தேன் என்று பொறுப்பேற்கவோ சொல்லிக் காட்டவோ கூடாது.
🌹 குழந்தை தன் விருப்பத்தில் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக நான் இருக்கிறேன் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 மற்றபடி என் அறிவைக் கொண்டு என் குழந்தையை சிறப்பாக வைக்க நான் முயற்சித்தாலும்,
🌹 எரியக்கூடியது தான் எரியும்.
🌹 நீங்கள் எவ்வளவுதான் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அது விஷச் செடி ஆகிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
🌹 அது உங்களை எதிர்க்கவும் செய்யலாம்.
🌹 அதனால், ஒரு தாய் அல்லது தந்தையாக நான் என் குழந்தைக்கு
🌹 நல்ல உணவை,
🌹 நல்ல கல்வியை,
🌹 நல்ல வாழ்வாதாரத்தை கொடுக்கலாமே தவிர
🌹 மற்றபடி அது தன் விருப்பத்தில் மட்டும் தான் வாழும்.
🌹 என்பதை புரிந்து கொண்டாலே,
🌹 எதற்கும் தாயோ தந்தையோ பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிந்துவிடும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : August 2025