மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
மனிதனின் அடிப்படைத் தேவையே விவசாயம் தான்.
மனிதனின் முதல் தொழில் என்றால் விவசாயம் தான்.
மனிதனின் முதல் உற்பத்தி என்றால் விவசாயம் தான்.
மனிதனின் முதல் மூலதனம் என்றால் விவசாயம் தான்.
🌹 விவசாயம் இருந்தால் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
🌹 விவசாயம் இல்லை என்றால் மனிதன் வாழ தகுதியற்றவன்.
🌹 இந்த உலகத்தில் உணவுப் பொருள் உற்பத்தி என்பது இயற்கையாகவே தானாகவே நடந்து கொண்டிருக்கிறது.
🌹 சிறு எறும்பும்,பறவைகளும் பூச்சிகளும் கூட அந்த வேலையை செய்கிறது.
🌹 இவைகளில் மனிதன் மட்டும் விசேஷமானவன்.
🌹 தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து கொள்பவன்.
🌹 நிலத்தைக் கீறி அதில் விதையை போட்டு முளைக்க வைக்க கற்றுக் கொண்டவன்.
🌹 மனிதனின் புதுப்புது கண்டுபிடிப்புகள் நிறைய இருந்தாலும்,
🌹 அதில் உன்னதமானது மண்ணை தோண்டுவதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான்.
அதாவது,
🌹 மனித படைப்புகளில்
மனிதனின் உன்னதமான கருவி ➡️ விவசாய கருவி
மனிதனின் உன்னதமான தொழில் ➡️ விவசாய தொழில்
மனிதனின் உன்னதமான உற்பத்தி ➡️ விவசாய உற்பத்தி
மனிதனின் உன்னதமான மூலதனம் ➡️ விவசாய மூலதனம்
🌹 ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையே விவசாயம் தான்.
🌹 ஏனென்றால், உணவு தான் மனிதனின் அனைத்து தேவைகளையும் தீர்த்து வைக்கிறது.
🌹 உணவு சரி இல்லை என்றால் உடல் சரியாக இருக்காது.
🌹 உடல் சரியில்லை என்றால் மனம் சரியாக இருக்காது.
🌹 மனம் சரியில்லை என்றால் வாழ்க்கை சரியாக இருக்காது.
🌹 கடைசியில் எந்த தேவையையும் சந்திக்க முடியாதபடி பிரச்சனையில் கொண்டு போய் விடும்.
🌹 அதனால் உணவு அடிப்படையானது.
🌹 அந்த உணவு உற்பத்தியில் தான் மனிதன் கவனமாக இருக்க வேண்டும்.
🌹 உணவு உற்பத்தி என்றால்,
நெல் உற்பத்தி
கோதுமை உற்பத்தி
பார்லி உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல்,
🌹 உயிரினங்களை கூட விவசாய பொருளாக மாற்றி விட்டோம்.
🌹 65 நாட்களில் கோழிகளை 🐣 உருவாக்கி அதை உண்ண 🍽️ கற்றுக் கொண்டோம்.
🌹 உணவுப் பொருள் என்று சொல்லும் பொழுது,
🌹 உணவுப் பொருளாக எதையெல்லாம் சாப்பிடலாம், எவையெல்லாம் நல்லது என்று சிந்தித்து,
🌹 அவைகளை எல்லாம் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டோம்.
🌹 அதனால் 🌾 நெல் உற்பத்தி மட்டும் தான் விவசாயம் என்று கிடையாது.
🌹 கோழி 🐣, ஆடு 🐐, மாடு 🐄 என்று உண்பதற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்தும் விவசாயம் தான்.
🌹 அதனால் விவசாயம் என்பது நிலத்தில் உற்பத்தி செய்யும் பொருள் மட்டும் கிடையாது.
🌹 உண்ணுவதற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து உயிரும் விவசாய பொருள் தான்.
🌹 கோழி, ஆடு, மாடு வெட்டி சாப்பிடுவது குற்றமா ? என்றால்,
🌹 குற்றம் கிடையாது.
🌹 குற்ற உணர்வும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
🌹 ஏனென்றால் நாம் நன்கு சாப்பிட்டு சந்தோசமாக இருக்கத்தான் வந்திருக்கிறோம்.
🌹 சாப்பிட்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
🌹 உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தேவையை சந்திக்க முடியும்.
🌹 கொண்டாட்டமாக இருக்க முடியும்.
🌹 பலர் தன்னுடைய உழைப்பை பல தொழில்களில் கொடுத்தாலும்,
🌹 விவசாயத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
🌹 விவசாயிகளுக்கு தான் பிரதான இடம் கொடுக்க வேண்டும்.
🌹 ஆனால் நாம் விவசாயிகளை தான்
அடிமையாகவும்
முட்டாளாகவும்
கடனாளியாகவும்
தற்கொலை செய்பவராகவும்
போராட்டக்காரராகவும்
ஏழையாகவும்
🌹 மாற்றி வைத்திருக்கிறோம்.
🌹 அதனால், மனிதன்
விவசாயம் தான் முதல்
விவசாயம் தான் தேவை
விவசாயம் தான் அடிப்படை
🌹 என்பதை தெரிந்து செயல்பட வேண்டும்.