மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
வாழ்க்கையை வலியில்லாமல் இலகுவாக வாழ்வதற்கு,
🌹 நான் ஏன் பிறந்திருக்கிறேன் ? என்ற கேள்விக்கு அடிப்படையான பதில் தெரிந்திருக்க வேண்டும்.
🌹 நான் ஏன் பிறந்திருக்கிறேன்? என்றால்,
🌹 கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு தான் நான் பிறந்திருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 கொண்டாட்டமாக இருப்பதற்கு பிறந்த நான் ஏன் துன்பப்படுகிறேன் ? என்றால்,
🌹 நான் குழந்தையாக இருக்கும்போது சந்தோஷமாகத்தான் இருந்தேன்.
🌹 என் பெற்றோர் எனக்கு ஒரு பெயர் வைத்து பள்ளிக்கு அனுப்பினார்கள்.
🌹 அங்குள்ளவர்கள் என் பெயரை கேலி செய்வதால் எனக்கு துன்பமாக இருக்கிறது.
🌹 ஏன் குழந்தையாக இருந்த எனக்கு துன்பமாக இருந்தது என்றால்,
🌹 என் பெயரை மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள் என்று குழந்தையாக இருந்த எனக்கு தெரியாது.
🌹 தெரியாததால் துன்பப்பட்டேன்.
🌹 குழந்தையாக அம்மா அப்பா உடன் சந்தோஷமாக இருந்த நான்,
🌹 ஏன் பள்ளிக்கு செல்லும் போது மட்டும் துன்பப்பட்டேன் ? என்றால்
🌹 குழந்தையான எனக்கு அம்மா அப்பாவை விட்டு வெளியே சென்றால்தான் ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்பது தெரியாது.
🌹 தெரியாததால் துன்பப்படுகிறது.
🌹 இப்போது எனக்கு குழந்தை பருவத்தில் இருந்து ஏன் துன்பம் வருகிறது என்றால்,
1️⃣ ஒன்றை பற்றி தெரியாததால் அல்லது புரியாதால் எனக்கு துன்பம் வருகிறது.
2️⃣ யாராவது என்னை விமர்சனம் செய்தார்கள் என்றால் துன்பம் வருகிறது.
3️⃣ என் தேவையை சந்திக்க முடியவில்லை என்றால் துன்பம் வருகிறது.
🌹 இப்போது வளர்ந்த நான் என் வாழ்க்கையில் வலி இல்லாமல் இலகுவாக இருக்க வேண்டுமென்றால்,
1️⃣ எனக்குத் தெரியாது என்பதை தெரிந்து கொள்ள அல்லது புரிந்து கொள்ள வேண்டும்.
2️⃣ யாராவது என்னை விமர்சனம் செய்தால் அதற்கு நான் ஈடு கொடுக்ககூடாது.
3️⃣ என்னுடைய தேவைகளை சந்திப்பதில் நான் தெளிவாக இருக்க வேண்டும்.
🌹 அதாவது,
1️⃣ எனக்குத் தெரிந்த செயல்களை மட்டும் தான் நான் செய்ய வேண்டும்.
தெரியாத செயல்களை செய்யக்கூடாது.
2️⃣ யார் விமர்சனம் செய்தாலும் அது அவருடைய பார்வை என்பது எனக்கு புரிய வேண்டும்.
3️⃣ என்னுடைய தேவைகளை அதாவது நான் சந்தோசமாக இருப்பதற்கான தேவைகளை சந்திப்பதற்காக செயல்பட வேண்டும்.
🌹 இந்த மூன்றையும் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே, வாழ்க்கையில் வலி இல்லாமல் இலகுவாக வாழலாம்.