மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
எனக்காக சாயும் அப்பா சாய்பாபா
🌹 சாய்பாபா கடவுளா என்றால்,
🌹 கடவுள் கிடையாது.
🌹 ஏனென்றால் கடவுளுக்கு வடிவம் கிடையாது.
🌹 வடிவம் இருந்தால் அது கடவுளாக இருக்க முடியாது.
🌹 சாய்பாபா என்றால் தெய்வம்.
📖 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். 📖
🌹 (பாபா) என்றால் (அப்பா).
🌹 (மாதா-பிதா-குரு) (தெய்வம்).
🌹 அதாவது,
🌹 (மாதா) (பிதா) (குரு) மூவரும் வணங்கப்படவேண்டிய (தெய்வங்கள்).
🌹 (சாய்பாபா) – எனக்காக (சாயும் அப்பா).
🌹 அதாவது எனக்காக உழைத்து,
🌹 பல அவமானங்களை கடந்து, எனக்காக சம்பாதித்து,
🌹 என்னை காப்பாற்றி,
🌹 என்னை ஒரு ஆளாக்கிய அப்பா தான்,
🌹 எனக்காக சாய்ந்திருக்கும் சாய்பாபா.
🌹 அதாவது, எனக்காக எந்த பக்கமும் சாய்ந்து, விட்டுக் கொடுத்து, அவமானங்களை கடந்து என்னை வாழ வைத்த தெய்வமான அப்பாதான் தான் என் சாய்பாபா.
🌹 எனக்காக (சாயும் அப்பா) தான், நான் வணங்க வேண்டிய தெய்வம்.
🌹 நீங்கள் யாரோ ஒருவரை சாய்பாபா என்ற பெயரில் கடவுளாக கற்றுக்கொண்டு வணங்கினால் அது உங்களுடைய பிரச்சனை.
🌹 ஆனால் நான் சாய்பாபா என்றால், என் அப்பாவை தான் பார்க்கிறேன்.