மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக எல்லாமே பொய் தான்.
🌹 எல்லாமே மாயை தான்.
🌹 வாழ்வே மாயம் தான்.
🌹 வாழ்க்கையே பொய்யானது தான்.
🌹 வாழ்க்கையே விளையாட்டு தான்.
🌹 அதை உண்மை என்று நினைப்பதால்தான் தீவிரமாக வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
🌹 வாழ்க்கை என்பது (விளையாட்டு தான்) ~ (பொய் தான்) ~ (மாயை தான்) என்பது புரிந்து விட்டால்,
🌹 விளையாட்டை விளையாட்டாக கொண்டாட்டமாக வாழலாம்.
🌹 அதனால்தான் பொய் சொல்லுங்கள் அதை சரியாக சொல்லுங்கள் என்று சொல்கிறேன்.
🌹 என்னைப் பற்றிய எல்லா உண்மையும் யாரிடமாவது சொல்ல முடியுமா?
🌹 சொன்னால் ஒத்துக் கொள்வார்களா?
🌹 என்றால், கிடையாது.
🌹 என்னுடைய கணவனோ அல்லது மனைவியோ என்னைப் பற்றிய எல்லா உண்மையும் சொன்னால் ஒத்துக் கொள்வார்களா என்றால் கிடையாது.
🌹 யாரும் யாரிடமும் உண்மையாக இருக்க முடியாது.
🌹 பொய்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
🌹 அதை சரியாக சொல்ல வேண்டும்.
🌹 நானும் பொய் பேசுகிறேனா என்றால்
🌹 ஆமாம்
🌹 பொய்தான் பேசுகிறேன்.
🌹 வாழைப்பழத் தோலின் உள்ளே பழம் மறைந்து இருப்பதைப் போல,
🌹 உண்மையை மறைத்து பொய் பேசுகிறேன்.
🌹 வாழைப்பழத் தோலை பார்த்து தான் வாழைப்பழம் வாங்கி இருப்போம்.
🌹 தோலைப் பார்த்து வாங்கினாலும் தோலுடன் யாரும் சாப்பிடுவது கிடையாது.
🌹 தோலை உரித்து உள்ளே இருக்கும் பழத்தை தான் சாப்பிடுகிறோம்.
🌹 அப்படி உண்மையை மறைத்த பொய்யாக எனது பேச்சு இருக்கும்.
🌹 நீங்கள் தான் சிந்தித்து உங்களுக்கான உண்மையை பெற வேண்டும்.