மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
மாற்றத்தை புரிந்து கொள்ளாதால் தோல்வி ஏற்படுகிறது.
🌹 எப்போது எனக்கு மரணத்தை பற்றிய தெளிவு ஏற்பட்டு விட்டதோ,
🌹 அப்போது எனக்கு தோல்வி என்பதே கிடையாது.
🌹 மாற்றங்கள் தான் உண்டு.
🌹 மாற்றத்தை நான் ஏற்றுக் கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.
🌹 நான் திடீரென்று ஏழையாகி விட்டேன் என்றால்
🌹 நான் தோற்று விட்டேன் என்று கிடையாது.
🌹 என் இருத்தலில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
🌹 அதனால், மாற்றத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது.
🌹 தோல்வி எப்படி கிடையாதோ,
🌹 அதைப் போன்று சரி தவறு என்பதும் கிடையாது.
🌹 தேவை தேவையற்றது என்பதுதான் உண்டு.
🌹 அதனால் மாற்றத்தை புரிந்து கொண்டால் தோல்வி என்பதே கிடையாது.
🌹 இரண்டு கூட்டம் சண்டையிட்டு ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு வெற்றியோ, தோல்வியோ அடைகிறது என்றால்,
🌹 என்னுடைய நோக்கம் புனிதமாக இருந்தாலும் கூட ஒரு மனிதனை மனிதன் எதிர்ப்பதும், அழிப்பதும் குற்றம்.
🌹 ஒருவருடைய அழிவில் என்னுடைய வாழ்க்கை இருக்க கூடாது.
🌹 இந்த உலகத்தில், 🌎
🍚 எனக்கும் உணவு இருக்கிறது.
🍚 எதிராளிக்கும் உணவு இருக்கிறது.
🫁 எனக்கும் காற்று இருக்கிறது.
🫁 எதிராளிக்கும் காற்று இருக்கிறது.
💧 எனக்கும் தண்ணீர் இருக்கிறது.
💧 எதிராளிக்கும் தண்ணீர் இருக்கிறது.
🌹 எல்லோருக்குமே எல்லாமே இருக்கிறது.
🌹 இதில் சண்டை போடுவதற்கு காரணம் என்ன இருக்கிறது என்றால்
🌹 நம்மை ஏமாற்றுகிறார்கள்
நாம் ஒரு ஜாதி,
நாம் ஒரு இனம்,
நாம் ஒரு கூட்டம் என்று நம்ப வைத்து
🌹 அவரவர் கொள்கைகளை காப்பாற்ற ஒருவருக்கொருவர் எதிர்த்து அழித்து அதை வெற்றி தோல்வி என்று நினைத்துக் கொள்கிறார்கள்
🌹 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
🌹 ஒற்றுமையாய் வாழ்ந்தால் உண்டு நன்மையே
🌹 வேற்றுமையாய் வாழ்ந்தால் உண்டு தீமை.
🌹 இதை புரிந்து கொண்டாலே மனிதனை மனிதன் எதிர்த்து அழித்து வெற்றி தோல்வி கொள்ள மாட்டான்.