மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2262)
📖 காட்டும் பதினொன்றும் கைகலந்தால்உடல்
📖 நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
📖 ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
📖 ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.
🌻 அடையாளம் காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல்
🌻 முடிவு அடைந்து முற்றிவிட்டால் நந்தி என்பதை தவிர வேறு அல்ல.
🌻 எதற்கும் ஆடாமல் அது விதி என்றே நினைத்தால்
🌻 ஈடற்ற மதி திடம் என எண்ணலும் ஆமே.
✍🏻 பின்குறிப்பு – அவத்தைகளை கடந்து உடல் விட்டவர் நந்தி எனப்படுவர்.
சிவாகமம் – (2263)
📖 கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
📖 மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
📖 பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற
📖 தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
🌻 கேவல அவத்தையில் கலவு சகலம் அதில்
🌻 மேவும் செலவு அசுத்தம் விடவரும் நீக்கிட
🌻 பாவும் இதை அடைந்தால் மூன்றும் படர்வது தடுக்கப்பட்டு
🌻 தீதற்ற சாக்கிர அதீதம் அடைந்தும் சுத்தமாகும்.
✍🏻 பின்குறிப்பு – வாழ்வின் சிக்கல்கள் கலவானால் தெளிவடைவதே அதன் செலவு இதனால் அதீதம் அடைந்து சுத்தமாகலாம்.
சிவாகமம் – (2264)
📖 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
📖 செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
📖 அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
📖 கல்லும் பிளந்து கடுவெளி யாமே.
🌻 எவ்வளவு விட முடியுமோ அவ்வளவு விட்டுவிடுங்கள் சினத்தை.
🌻 சிந்தை செல்லும் அளவிற்கு செல்ல விடுங்கள் சிந்தையை.
🌻 அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
🌻 கல்லும் பிளந்து கடுவெளி அடையலாம்.
✍🏻 பின்குறிப்பு – சினம் ஏற்படாதபடி புரிதல் உண்டானால் அருள் பெருகி இறையை அடையலாம்.