ஒதுங்கி போன பிறகும் தொந்தரவு செய்பவர்களை என்ன செய்வது? (Othunki pona piragum thontharavu seipavarkalai enna seivathu?)
🌹 ஒருவர் உங்களை தொந்தரவு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் உள்ளவராக நீங்கள் இருந்தால் உண்மையிலேயே நீங்கள் பெரிய மனிதர் தான்.
🌹 அதாவது, உங்கள் மீது கல்லோ, மண்ணோ, மலமோ, வார்த்தையோ வீசுகிறார்கள் என்றால்,
🌹 அதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ளும் மனபக்குவத்துடன் ஒதுங்கி சென்றால் உண்மையிலேயே நீங்கள் பெரிய மனிதர் தான்.
🌹 ஆனால், உங்களை தொந்தரவு செய்பவர்களை அல்லது உங்களைப் பற்றி பேசுபவர்களை பழிவாங்க நினைத்தால்,
🌹 உங்கள் வாழ்க்கையை உங்களால் வாழ முடியாது.பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் உங்களையும், உங்கள் காலத்தையும், உங்கள் முன்னேற்றத்தையும் இழந்திருப்பீர்கள்.
🌹 நீங்கள் ஒதுங்கிபோன பிறகும் ஒருவர் உங்களை தொந்தரவு செய்கிறார் என்பதால் அவரை தவறு என்றும் சொல்ல முடியாது.
🌹 அவருடைய புரிதலின் நிமித்தம் அவர் சரியாகத்தான் இருப்பார்.
🌹 அதனால், அவரை பழிவாங்க வேண்டிய அவசியம் கிடையாது.
🌹 உங்கள் தேவையின் மீது கவனமாக இருப்பதுதான் சிறந்தது.
🌹 இந்த உலகத்தில் (சரி,தவறு) (நல்லது, கெட்டது) என்று பார்ப்பவரை விட,
🌹 எனக்கு எது தேவை ? எது தேவையில்லாதது ? என்பதை புரிந்து கொண்டு செயல்படுபவன் தான் வெற்றி பெறுவான்.
🌹 எனக்குத் தேவையில்லாத ஒன்று கேட்டால் அதை கேட்கக் கூடாது.
🌹 எனக்குத் தேவையில்லாத ஒன்று காட்டப்பட்டால் அதை பார்க்க கூடாது.
🌹 எனக்கான தேவையை சந்திப்பதில் தான் நான் கவனமாக இருக்க வேண்டும்.