மனிதனின் குணமும் செயலும் ஜோதிட வரையறைக்கு உட்பட்டதா? ஜோதிட கணிப்புகளை கடந்து வாழ்வதற்கான வழி என்ன? (Manithanin Gunamum seyalum jothida variyaraikku utpattatha ? Jothida kanippukalai kadanthu selvatherkkana vali enna?)
🌹 மனித குணமும், செயலும் ஜோதிட வரையறைக்கு உட்பட்டதா என்றால், உட்பட்டது தான்.
🌹 அதனால்தான், ஒரு பக்கம்,உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைப்பவருக்கு ஜோதிட வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன்.
🌹 இன்னொரு பக்கம் ஜோதிடம் பார்க்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
🌹 ஏனென்றால் , இங்கே எனக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் ஒப்பந்தம்.
🌹 ஜாதகம் பார்த்து தான் எனக்கு சாதகமான வழிகளை கண்டறிந்து செயல்பட முடியும் என்பது கிடையாது.
🌹 என்னுடைய சிந்தனைக்கும், அறிவிற்கும் ஆதாரமாக இருப்பது இறைவன் என்பதால்,
🌹 இறைவன் பக்கம் திரும்பி,
🌹 உண்மையிலேயே இறைவன் என்றால் என்ன ?
🌹 ஏன் நம்மை இறைவன் படைத்திருக்கிறான் ? என்பதை புரிந்து கொண்டு,
🌹 இறை பக்தியுடன் செயல்படுகிற பட்சத்தில்,
🌹 என்னுடைய அறிவு எந்த சூழ்நிலையையும் சாதகமாக்கிக் கொள்ளும்படி சரியாக தான் வேலை செய்யும்.
🌹 ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது.
🌹 பிரபஞ்சத்தையும் கோள்களையும் என்னையும் படைத்தது இறைவன்.
🌹 படைப்புகள் எல்லாம் படைக்கப்பட்டதன் நோக்கமே,
🌹 நான் கொண்டாட்டமாக மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
🌹 அதனால் எதற்காகவும் (ஜோதிடத்திற்காகவும்) யாருக்காகவும் (ஜோதிடருக்காகவும்) என்னுடைய கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் நான் இழக்க மாட்டேன் என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.
🌹 அதுவே இறைவனுக்கு செய்யும் தொண்டு அல்லது பக்தி.