என்னிடம் சத்தியம் கேட்காமல் உபதேசத்தை சொல்லமுடியுமா? (Ennidam sathiyam ketkamal Upadesaththai sollamudiyuma?)
🌹 உபதேசத்தை சொல்லக்கூடாது என்று யாரிடமும் நான் சத்தியம் கேட்பதில்லை.
🌹 உபதேசத்தை சத்தியம் கேட்காமல் சொல்ல முடியுமா ? என்று நீங்கள் கேட்பதால்,
🌹 உபதேசத்தை வெளியே சொல்ல நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது.
🌹 நான் உங்கள் மனசாட்சியை நம்பி ஒரு சத்தியத்தை, ஒரு ரகசியத்தை, ஒரு உண்மையை சொல்லி இருக்கிறேன் என்றால்,
🌹 அந்த சத்தியத்தை, ரகசியத்தை, உண்மையை காப்பாற்ற வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
🌹 அதை மீறி வெளியே சொன்னால் அதற்கு தண்டனை உண்டு.
🌹 அதை சொல்ல நினைப்பது நியாயமா ? என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
🌹 அதை அனுபவிக்காமல், அதை அடையாமல் சொன்னால், அது சார்ந்த கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா ? என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
🌹 அனுபவித்த ஒரு மனிதன் சொல்வதற்கு இருக்கும்போது, நான் அதை சொல்லலாமா ? என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
🌹 ஒன்றை அனுபவிக்காமல் பிறருக்கு கற்று தரவேண்டும் என்ற முயற்சியே அசிங்கமானதா ? இல்லையா ? என்பதை என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
🌹 உங்கள் மனசாட்சியை மீறி நீங்கள் வெளியே சொன்னால் நான் உங்களை தண்டிக்க போவது கிடையாது.
🌹 ஆனால் அது இறைவன் சமூகத்தில் செய்யும் குற்றம் தான்.
🌹 அதற்கான தண்டனை இறைவனிடத்தில் உண்டு.
🌹 அந்த தண்டனையை அனுபவித்தவர்களை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
🌹 இல்லையென்றால் நீங்களே அந்த தண்டனையை அனுபவித்து பிறருக்கு சொல்லலாம்.
🌹 அதனால், உபதேசத்தை வெளியே சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் என்னிடம் கற்றுக் கொள்ள வேண்டாம்.
🌹 அதை சொல்வது உங்களுடைய வேலை கிடையாது.
🌹 அதை சொல்வதற்கு தகுதி இருக்கிறதா ? என்பது உங்கள் மனசாட்சிக்கு தான் தெரியும்.
🌹 அதனால் தகுதி இல்லாமல், அனுபவிக்காமல் ஒன்றை பற்றி சொல்வது குற்றம்.
🌹 எனவே குரு உபதேசத்தையும்,
🌹 மாதர் தம் புணர்ச்சியையும் வெளியே சொல்ல கூடாது என்பது என்னுடைய அறிவுரை.