அடுத்தவரின் சந்தோஷத்திற்காக நான் கஷ்டப்படுவது சரியா? (Aduththavarin Santhosathirkkaga naan kastapaduvathu sariya?)
🌹 பிறர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் கஷ்டப்பட்டால் அதை செய்யக்கூடாது.
🌹 அதாவது, பிறருக்கு உதவுவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அதை செய்யக்கூடாது.
🌹 நீங்கள் கஷ்டப்பட்டு பிறருக்கு உதவி செய்தால் அதன் பெயர் உதவி கிடையாது.
🌹 ஒரு உயரமான இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது.
🌹 அதை, ஒருவர் என் முதுகின் மீது ஏறி சாப்பிட்டு சந்தோஷம் அடையலாம் என்றால்,
🌹 அவர் அடையும் சந்தோஷம் எனக்கு சந்தோஷத்தை தருகின்ற பட்சத்தில் என் முதுகின் மீது ஏற அனுமதிக்கலாம்.
🌹 ஆனால், என் முதுகின் மீது ஏறி சாப்பிட்டு அறிவு வந்தவுடன் என்னை உதைத்து தள்ளி விடுவார் என்றால்,
🌹 அவரை முதுகின் மீது ஏற அனுமதிக்க கூடாது.
🌹 ஒருவருக்கு உதவுகிறீர்கள் என்றால் அதை யாருக்காக செய்கிறீர்கள் என்பதை தெளிவாக்கிக்கொள்ளுங்கள்.
🌹 அழுகிற ஒரு குழந்தையை, தாய் தாலாட்டு பாடி தூங்க வைக்கிறாள்.
🌹 உண்மையிலேயே அவள் குழந்தைக்கு மட்டும் தான் உதவி செய்தாலா ? என்றால், கிடையாது.
🌹 குழந்தை அழுவது தனக்கு துன்பமாக, தனக்கு தொந்தரவாக இருப்பதால் அதை தாலாட்டு பாடி தூங்க வைத்து அவளும் திருப்தி அடைந்து குழந்தையையும் திருப்தி அடைய வைக்கிறாள்.
🌹 இதை புரிந்து கொள்ளாமல், நான் தான் கஷ்டப்பட்டு குழந்தையை வளர்க்கிறேன் என்ற நினைப்பில் அவள் இருந்தால்,
🌹 அந்தக் குழந்தை வளர்ந்தவுடன் அதனிடம் சொல்லிக் காட்ட வேண்டியிருக்கும்.
🌹 நான் சத்சங்கத்தில் பேச வந்ததன் நோக்கமே நான் திருப்தி அடைய வேண்டும் என்பதாகத்தான்.
🌹 ஏனென்றால், எனக்கு கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கான வழி தெரிந்து விட்டது.
🌹 ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அப்படி இல்லாததால், என்னால் திருப்தியாக அதை அனுபவிக்க முடியவில்லை.
🌹 அதனால் தான் பிறரையும் கொண்டாட செய்து, நானும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இங்கே பேச வந்திருக்கிறேன்.
🌹 அதனால், உங்களுக்கு சந்தோஷமாக, திருப்தியாக இருந்தால் மட்டும் பிறருக்கு உதவுங்கள்.
🌹 நீங்கள் யாருக்கு எதை செய்தாலும் அதை உங்களுக்காகத்தான் செய்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.