ஒரு பொருளுக்கு பேரம் பேசுவது சரியா? (Oru Porulukku Peram Pesuvathu Sariya?)
🌹 இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.
🌹 அதனால், எதையும் பேரம் பேசி வாங்கலாம்.
🌹 ஒன்றை பேரம் பேசி விலையின் மதிப்பை குறைத்து தான் வாங்க வேண்டும் என்று கிடையாது.
🌹 அதன் தகுதியை பொருத்து விலை மதிப்பை கூட்டியும் வாங்கலாம்.
🌹 ஏனென்றால், தேவையை பொருத்து தகுதி மாறிவிடும்.
🌹 இந்த உலகத்தில் பேரம் பேச முடியாத ஒன்று கடவுள் மட்டும் தான்.
🌹 ஏனென்றால் அது ஒரு பொருள் கிடையாது.
🌹 ஆனால், கடவுளை ஒரு பொருளாக்கி விட்டால் பேரம் பேசலாம்.
🌹 தங்கத்தில் செய்தால் ஒரு விலை,
🌹 இரும்பில் செய்தால் ஒரு விலை,
🌹 பித்தளையில் செய்தால் ஒரு விலை.
🌹 என்று, பொருளாக்கி பேரம் பேசலாம்.
🌹 ஆனால், உண்மையிலேயே கடவுளை பொருளாக்க முடியாது.
🌹 ஏனென்றால், அது சூன்யமாக (வெட்டவெளியாக) இருக்கிறது.
🌹 ஆனால் அது சார்ந்த புத்தகத்திற்கு விலை பேசலாம்.
🌹 அதாவது திருக்குறள், சிவவாக்கியம், மற்ற மத நூல்களுக்கு விலை பேசலாம்.
🌹 நூல்களில் உள்ள கருத்து சித்தாந்தங்களை புரிய வைப்பதற்க்கும் பேரம் பேசலாம்.
🌹 அதனால், இந்த உலகத்தில் கடவுளைத் தவிர மற்ற அனைத்துமே பேரம் பேசக் கூடியது தான்.
🌹 இதை புரிந்து கொண்டு, தேவையைப் பொருத்து தகுதியானதை பேரம் பேசி கூட்டியோ, குறைத்தோ இந்த உலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.