மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2532)
📖 பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
📖 பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
📖 ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
📖 காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே.
🌻 முற்று பெற்ற பூரணி என்பது வெளி இருக்கும் ஒன்றாக இருப்பது இல்லை.
🌻 அடையாளப்படும் பேரணி கொள்ளுவது இல்லை பேச்சு என ஒன்று இல்லாமையால்.
🌻 ஒன்றையும் சாராது ஒன்றும் இல்லாமையால்
🌻 காரணம் இன்றியே காட்டும் தன்மையானதே.
✍🏻 பின்குறிப்பு – இறை அனுபவம் மட்டுமே இதற்கு சரியான விளக்கம்.
சிவாகமம் – (2533)
📖 நீயது வானா யெனநின்ற பேருரை
📖 ஆய்து நானானேன் என்னச் சமைந்தறச்
📖 சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
📖 ஆயது வாயனந் தானந்தி யாகுமே.
🌻 நீ அது ஆனாய் என நின்ற பேருரை
🌻 கேட்டு ஆராய அதுவாக நானே ஆனேன் என்று பொருள் தந்து
🌻 குழந்தையை சிவமாக்கும் சீர் நந்தியின் பேரருள்
🌻 ஆராய ஆனந்த நந்தி ஆகுமே.
✍🏻 பின்குறிப்பு – நான் கடவுள் என விளக்கிய நந்தி ஆனந்தமாய் ஆனந்தம் அருளினார்.
சிவாகமம் – (2534)
📖 உயிர்பர மாக உயர்பர சீவன்
📖 அரிய சிவமாக அச்சிவ வேதத்து
📖 இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
📖 உரிய உரையற்ற வோமய மாமே.
🌻 உயிர் பரம் என இருக்க உயர்பர சீவன்
🌻 அரிய சிவமாக அதை விளக்கும் சிவ வேதத்து
🌻 முழுவதிலும் சீரான பராபரன் என்ன என
🌻 உரியதை உரைசெய்ய ஓ என்ற மயமாமே.
✍🏻 பின்குறிப்பு – உயிர் பரம் என அரிய நாத ஒலி என மாறுகிறது.
சிவாகமம் – (2535)
📖 வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
📖 ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
📖 தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
📖 சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.
🌻 வாயாக இருப்பது நாசியே புருவமத்தியே மத்தகம் உச்சியில்
🌻 ஆய நாசி உச்சி முதலவையாக நிற்கும்
🌻 தாய்நாடி. ஆதி வாக்காதி சகலாதி
🌻 சேய் நாடொளி என சிவகதி ஐந்தாக இருக்கிறது.
✍🏻 பின்குறிப்பு – சுவாச கதியை ஐந்து சிவகதி என பிரித்து பார்க்கலாம்.