மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2574)
📖 உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
📖 பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
📖 திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
📖 வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.
🌻 உண்மை உணர்ந்து ஒன்றும் சித்தமே முத்தியாம்.
🌻 பெண் மயக்கம் அழித்துவிடல் அட்டமா சித்தியாம்.
🌻 திடமான ஞானி சிவகாயம் கைவிட்டால் வரும்
🌻 வண்மை அருள்தான் அடைந்தபின் ஆறுமே.
✍🏻 பின்குறிப்பு – திடமான ஞானி என்ற இறைப்பற்றில் திளைப்பவர் முடிவும் வழிகாட்டுவதாக அமையும்.
சிவாகமம் – (2575)
📖 அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
📖 சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
📖 பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
📖 புவனிவன் போவது பொய்கண்ட போதே.
🌻 அவனை இவனை ஈசன் என்று தன்னை கடந்து புறத்தே நாடி
🌻 சிவன் இவன் ஈசன் என்ற உண்மையை உணராதவர்
🌻 உலகில் இவன் அவன் என்று பலவகையாக இருக்காமல்
🌻 மாற்றம் காண்பது பொய்யை கண்ட பொழுதே.
✍🏻 பின்குறிப்பு – பொய்யை அறிந்தும் உண்மையை அடையலாம்.
சிவாகமம் – (2576)
📖 கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
📖 பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
📖 விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
📖 நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.
🌻 வெப்பத்தால் கொதிப்பதும் வெப்பம் தணிந்து குளிர்வதும் என
🌻 இது இந்த பாரில் முற்றும்
🌻 விதிப்பதை செய்யும் ஐவரை வேண்டாது உடலுக்குள்
🌻 நொதிக்கின்ற ஒற்றை நூல் ஒன்று போதுமே.
✍🏻 பின்குறிப்பு – உடலுக்குள் பக்தியால் நொதிக்கச் செய்யும் நூல் ஒன்று போதும் இறை உணர.