மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
சிவாகமம் – (2439)
📖 ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்து
📖 ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு
📖 வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு
📖 ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.
🌻 ஒன்றிலிருந்து பிற ஒன்றாய் ஏறியபடியே மலம் ஐந்தையும் அடைந்து
🌻 தெளிந்த ஞானச் சிவோகம் அடைந்திட்டு
🌻 மாறும் முச்சொரூபத்து வீடுற்று அங்கு
🌻 நிலைப்பதில் முன்னே வைத்தவை உண்மை செய்யுமே.
✍🏻 பின்குறிப்பு – முன் செய்த தவத்தால் அனுபவம் கடந்த ஞானம் அருளப்படும்.
சிவாகமம் – (2440)
📖 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
📖 மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள
📖 மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்
📖 காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
🌻 மாளிகைகள் மூன்று உள்ளன முறையே அதை மூவர் இருப்பிடம் எனலாம்.
🌻 அந்த மூன்றினில் முப்பத்தாறும் உதிக்கும்.
🌻 மூன்றினில் உள்ளே முளைத்தெழும் சோதியை
🌻 கண்டு அறிந்ததும் உடல்கள் கணக்கற்று அடைந்ததை அறியலாம்.
✍🏻 பின்குறிப்பு – திருவடியின் பெருமை இது.
சிவாகமம் – (2441)
📖 உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போன
📖 நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய
📖 பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
📖 அளவும் பெருமையும் ஆரறி வாரே.
🌻 உலகம் சற்று சிதைந்து தொழிற்பட சென்ற
🌻 நிலா மற்றும் சுடரொளி மூன்றும் ஒன்றாக
🌻 பரவும் பரிசுடன் பான்மையுள் ஈசன்
🌻 அளவும் பெருமையும் யார் அறிவார்களோ.
✍🏻 பின்குறிப்பு – பூமியின் சிதைந்த நிலா மற்றும் சூரிய நட்சத்திரங்களின் வெளிச்சம் என பலவகை அற்புதம் உண்டாக்கிய ஈசன் அருளை யார் அறியாது இருப்பார்களோ?
சிவாகமம் – (2442)
📖 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து
📖 அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
📖 குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
📖 உருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.
🌻 பெறுவதற்கு வாசலாகிய முதல் என்ற எண்ணத் தகுந்தவற்றின் பேதமே பேதித்து
🌻 அருவாய், உருவாய், அருஉருவாய் இருந்து
🌻 குருவாய் வரும் சத்தி தலைமை உயிர் என்ற பன்மையுடன்
🌻 உருவாய் உடனிருந்து ஒன்றாய் அன்றாமே.
✍🏻 பின்குறிப்பு – உரு கொண்டு வந்த உயிர்களின் தலைவனாய் குருவாய் அருள்வது அரு உரு அரு உரு என மூன்றாய் உள்ளது.