ஆன்மீகவாதியும் அரசியல்வாதியும் செத்துப்போனவர்களை வைத்து பிழைப்பு நடத்துவது ஏன்?
🌹 நான் ஒரு ஆன்மீகவாதி.
🌹 ஆன்மீகத்திலேயேயும் சரி அரசியலிலேயும் சரி இறந்து போன மனிதர்களை நான் கணக்கில் கொள்ள மாட்டேன்.
🌹 எனக்குப் பின்புறம் பார்த்தீர்கள் என்றால் யாருடைய புகைப்படமும் இருக்காது.
🌹 நல்ல வேலை என்னுடைய குரு எனக்கு அவனுடைய படத்தை கொடுத்து விட்டு போகவில்லை கொடுத்திருந்தால் வைத்திருப்பேன்.
🌹 ஆனால் வைத்திருந்தாலும் எனது பேச்சை எப்படி ஆரம்பித்திருப்பேன் என்றால் இப்படி ஒரு மனிதன் இருந்திருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் நீங்கள் படத்தில் பார்ப்பது அந்த நொடியில் நடந்த ஒரு நிகழ்வு நிகழ்வுதான் என்று சொல்லி ஆரம்பித்திருப்பேன்.
🌹 நீங்கள் என்னை படம் எடுத்து வைத்துக் கொண்டாலும் அது அந்த வினாடியில் தான் நான் அப்படி இருந்திருப்பேன். ஆனால் என்னை நேரில் பார்க்கும்போது அதே மாதிரி இருக்க மாட்டேன்.
🌹 புரியாத மனிதன் ஏதோ ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு பேசி பிழைக்கிறான்.
🌹 அரசியலிலும் இப்படிதான் ஒருவர் இருக்கும்போது அவரை மதிக்காமல் அவர் இறந்த பிறகு அவரின் படத்தைக் கொண்டு தன்னை விளம்பரம் செய்து கொள்கிறார்கள்.
🌹 இந்த அரசியல்வாதிகள் எல்லாம் இறந்தவரின் பபடத்திற்கு அருகில் தன்னுடைய படத்தை மாட்டி வைத்திருப்பார்கள்.
🌹 காரணம் இவர்களின் வரிசையில் வந்த அடுத்த அரசியல் தலைவர் இவர்தான் என்று உங்களுக்கு புரியலாம்.
🌹 ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக எனக்கு இந்த படத்தில் உள்ள பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். நாளை இவரும் எவ்வளவு பெரிய தலைவரானாலும் இறந்து விடுவார் என்று தான் எனக்கு புரியும்.
🌹 தலைவர்களின் பெயரைச் சொல்லாமல் அரசியல் கட்சியில் இருக்காது.
🌹 புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட ஏதோ ஒரு தலைவரின் பெயர் இருக்கும்.
🌹 ஆனால் எங்கள் கட்சியில் தலைவரின் பெயரே இருக்காது.
🌹 பெயர் வல்லரசு கட்சி அதன் நிர்வாகி நான்.
இங்கே எந்த தலைவரின் புகைப்படமும் இருக்காது.
🌹 அதனால் ஆன்மீகம் அல்லது அரசியலில் பின்பக்கம் பொம்மை வைத்திருக்கிறார் என்றால் அவர் தன் சுயபலத்தை நம்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
🌹 (ஆன்மீகத்தில்) – நான் கடவுள் தெரிந்து கொண்டவன் என்றால் நான் நேரடியாக உங்களிடம் கடவுளை சொல்லலாம்.
🌹 (அரசியலில்) – நான் நேர்மையான மனிதனாக இருந்து அரசியலை நடத்தப் போகிறேன் என்றால் உங்கள் நலன் விரும்பி என்றிருந்தால் நான் உங்கள் தலைவர் என்று சொல்லலாம்.
🌹 யாரோ ஒரு தலைவர் உங்கள் நலன் விரும்பி என்று சொல்லி ஆரம்பிப்பது அசிங்கமில்லையா.
🌹 அதனால் ஆன்மீகமும் அரசியலோ இறந்தவர்களை வைத்திருந்தாலும் நான் ஒரு விசேஷம் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது.
🌹 ஓட்டு போடுகிறவர்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் என்று தெரிந்துதான் ஓட்டு போட்டார்களா??
யாராவது அதைப்பற்றி சொன்னார்களா இல்லை நீங்கள் தான் அதை கேட்டீர்களா??
🌹 இல்லை உங்களுக்கு விளம்பரமான மனிதர்கள் மட்டும்தான் தெரியும் அதில் தேர்ந்தெடுத்து ஓட்டு போடுகிறீர்கள்.
🌹 தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும் இந்த இந்த மனிதர்கள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள் அவர்கள் இந்த இந்த கொள்கைகளை கூறியிருக்கிறார்கள் அதில் தேர்ந்தெடுத்து உங்களது ஓட்டினை கொடுங்கள் என்று தேர்தல் ஆணையம் சொல்வதில்லை.
🌹 வேட்பாளர் வந்து என்னிடம் பேசவே கூடாது தேர்தல் ஆணையத்தின் மீது மட்டும் தான் எனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் சிந்தித்ததா
🌹 தேர்தல் ஒழுங்காக கடத்தினாலே நாம் நன்றாகிடுவோம்.
🌹 தேர்தல் ஆணையத்தை திருத்தி விட்டாலே நாம் சரியாகிவிடலாம்.
🌹 அதனால் ஆன்மிகத்திலும் அரசியலையும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருந்தால் நாமும் ஏமாந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025