என்னிடம் நான் எப்படி நேர்மையாக இருப்பது ?
🌹 நான் யார் என்பது தெரிந்தால் தான் என்னிடம் நான் நேர்மையாக இருக்க முடியும்.
🌹 நான் ஒரு வளர்க்கப்பட்ட விலங்காக இருப்பதால் அதைத்தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
🌹 நான் ஒரு ஆண் என்று வளர்க்கப்படுகிறேன் எனக்கு எந்தப் பெண்ணே பார்த்தாலும் காமம் தோன்றுகிறது.
🌹 அது உண்மையிலேயே என்னிடம் உள்ளது தானா என்றால் கிடையாது யாரோ ஒருவர் கற்றுக் கொடுத்து விட்டார்.
🌹 பெண் மீது ஏற்படும் காமம் குழந்தையாக இருக்கும் போது இருக்காது மற்ற நேரங்களில் இருக்காது. அனுபவிக்கும் போது மட்டும் தான் இருக்கும்.
🌹 ஆனால் படம், சினிமா, விளம்பரம் என என்னை சுற்றிலும் காமம் சார்ந்த காட்சிகளை மட்டுமே காட்டுகிறார்கள்.
🌹 அதனால் நான் எப்போதும் எனக்குள்ளே காமம் சார்ந்து மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
🌹 அதை நடைமுறைப்படுத்த போகிறேனோ, இல்லையோ ஆனால் அதை சார்ந்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
🌹 இப்போது நான் உள்ளே உண்மையாக பேசுகிறேனா இல்லை சும்மா பேசுகிறேனா என்றால் சும்மாதான் பேசுகிறேன். அப்படி என்றால் அது என்னிடம் நான் நேர்மையாக பேசுவது என்று ஆகாது.
🌹 நேர்மை என்றால் நான் எனக்கு உள்ளே ஒன்று பேசுகிறேன் என்றால் அதை வெளியே நடைமுறைப்படுத்த வேண்டும் அதற்குத்தான் பேச வேண்டும்.
🌹 காமத்தை மட்டும் அல்ல எல்லாவற்றையும் தான்.
🌹 நான் என்னிடம் எப்படி நேர்மையாக பேச வேண்டுமென்றால் இது எனக்கு தேவையா தேவையில்லையா என்பதை முடிவு செய்த பின் தான் பேச வேண்டும்.
🌹 நான் ஒரு வேலை செய்யப் போகிறேன் என்றால் அந்த வேலையை பற்றிய அடிப்படையில் இருந்து அந்த வேலையில் சிகரம் தொடும் வரை என்னிடத்தில் பேசலாம்.
🌹 அதற்கான தகவல் எனக்குத் தெரியாது என்றால் வெளியில் இருந்து பெற்று என்னுள் பேசலாம்.
🌹 நிறைய தகவல்களை எனக்கு தேவை இல்லை என்றாலும் தெரிந்து கொள்ளலாம் எப்போதாவது உதவும்.
🌹 அதனால் நான் யார் என்றால் நிறைய தகவல்கள் பெறப்பட்ட ஜீவிதமாக இருக்கிறேன். அந்த தகவலைத்தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
🌹 ஆனால் உண்மையிலேயே நான் யார் என்று கேட்டீர்கள் என்றால்
🌹 நான் ஒரு மனம்
🌹 இந்த உடலுக்குள் ஒரு மனமாக இருக்கிறேன்.
🌹 மனம் ஜென்ம ஜென்மமாக மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி ஆனந்த வாழ்வு வகுப்பில் கூறியிருப்பேன்.
🌹 அப்படி ஜென்ம ஜென்மமாக மாறி வருகின்ற இந்த மனதில் ஏதோ ஒரு தொகுப்புகள் அல்லது நிறைய தகவல்கள் எல்லாம் இருக்கும்.
🌹 மனம் அப்படி பெறப்பட்ட தகவலை கொண்டு தான் நான் என்று திரிந்து கொண்டிருக்கிறது.
🌹 தூங்கும் போது நான் என்பது இல்லை
🌹 நேர்மையாக பார்க்கும் போது நான் என்ற ஒன்று இல்லை ஆனால் தகவல் தான் எண்ணமாக எழுந்து பேசுகிறது.
🌹 அதனால், நான் என்னிடம் எப்படி பேச வேண்டுமென்றால் ஒரு முடிவுக்கு வருவதற்கு பேச வேண்டும்.
🌹 நான் அந்தப் பெண்ணுடன் புணரப்போவதில்லை ஆனால் அதைப் பற்றி கற்பனை செய்து கொண்டே இருக்கிறேன் அதனால் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று தேவை இல்லை என்று பேசி எனக்குள் முடிவுக்கு வரவேண்டும்.
🌹 இந்த வேலைகள் எல்லாம் நான் செய்ய போவதில்லை என்றால் அதைப் பற்றி தேவையில்லாமல் உள்ளே பேசுவது தேவையில்லை என முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும்.
🌹 அதனால் உள்ளே தேவையின் பொருட்டு பேசுவது மட்டும்தான் நேர்மை.
🌹 நான் எனக்குள் நேர்மையாக பேசி எடுக்கும் முடிவுகள் தான் வெளியேயும் இருக்கும் என்பது கிடையாது.
🌹 காலையில் இட்லி செய்யலாம் என்று முடிவு செய்திருப்பேன் ஆனால் நான் முடிவு செய்த இட்லி தான் வந்திருக்குமா என்றால் கிடையாது.
🌹 அதனால், விநாடிக்கு வினாடி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பதை புரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒத்திசைவு கொள்ள முடியாதபடி நான் எனக்குள் பேசி முடிவுக்கு வந்திருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 அதனால் எப்போதும் எந்த செயல் செய்தாலும் அதனுடன் ஒத்திசைந்து செயல்படுங்கள்.
🌹 உள்ளுக்குள் தேவையானதை நேர்மையாக பேசி முடிவெடுத்து வெளியே செயல்படுத்தும் போது அதனுடன் ஒத்திசைந்து செயல்படுங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025