LGBT சமூகம் உருவாக காரணம் என்ன?
🌹 உடம்பு இரண்டு விதம், (ஆண் உடம்பு – பெண் உடம்பு).
🌹 உடம்பில் ஹார்மோன் பிரச்சனை காரணமாக ஆண் தன்மையையோ அல்லது பெண் தன்மையையோ இழந்தால் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகத்தில் அலி, திருநங்கை, பேடு என்ற பெயர் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
🌹 உடற்கூறுபாடு மாறினாலும் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்துகொள்ளலாம் என்பதற்காகத்தான் மூன்றாவது பாலினத்தை நம் முன்னோர்கள் உருவாக்கவில்லை.
🌹 பொதுவாக, பாலுணர்வு அல்லது இனக்கவர்ச்சி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஏற்படும் ஆனால் மூன்றாவது பாலினத்திற்கு ஏற்படாது.
🌹 சமூகத்தில், நம்மை சுற்றியும் காமம் சார்ந்த காட்சிகளே அதிகமாக காட்டப்படுவதால் பாலுணர்வு தூண்டல் என்பது குழந்தையில் இருந்தே நடக்கிறது.
🌹 அதனால், அதை தீர்த்துக்கொள்வதற்கான வழியையும் வேறு வேறு இடத்தில் தேடிக்கொள்கிறார்கள்.
🌹 இப்போது இந்த சமூகத்தில் ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் கூட சேர்ந்து வாழ்கிறார்கள்.
🌹 காரணம் பாலுணர்வுக்காக மட்டும் கிடையாது. எனக்கு அந்த பாலினத்திடமிருந்து அன்பும், பரஸ்பரமும் கிடைக்கிறது. அப்படியில்லையென்றால் என்னால் அதை எதிராளியிடம் கொடுக்க முடிகிறது என்பதால் தான்.
🌹 நிறைய கணவன் மனைவி ஒத்து போகாமல் இருப்பதற்கு காரணம் பாலுணர்வு மட்டுமில்லை, என்னுடைய உணர்வையும், அன்பையும், பரஸ்பரத்தையும் பகிர்ந்துகொள்ள முடியாததும், அவருடைய அன்பையும் பரஸ்பரத்தையும் புரிந்துகொள்ள முடியாததுதான் .
🌹 இது புரிந்தால் ஆணும் ஆணுமாக அல்லது பெண்ணும் பெண்ணுமாக சேர்ந்து வாழ்பவர்களை பார்த்து அசிங்கப்பட மாட்டோம்.
🌹 அதனால் LGBT சமூகம் உருவாவதற்கு காரணம் பாலுணர்வு தாண்டி, அன்பும் பரஸ்பரமும் இல்லாதது மட்டும் தான். அதனால் இதை என்னுடைய ஒழுக்க கோட்பாட்டைக்கொண்டு சரி தவறு என்று பார்க்காமல், உண்மை புரிந்துகொள்ளலாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025