வெற்றி தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்டதா?
🌹 நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் செய்யவில்லை என்றாலும் நடப்பது தான் நடக்கும் ஏனென்றால் Already என்னை Pattern Design செய்துதான் இறைவன் படைத்திருக்கிறான்.
🌹 தாயம் விளையாடும் போது தாயகட்டையை எடுத்துக் கொண்டால் 1,2,3,0 Numbers எல்லாம் இருக்கும்.
🌹 இரண்டு தாயக்கட்டை வைத்து விளையாடும் போது ஒரு பக்கம் (0) வும் இன்னொரு பக்கம் (0) ம் வந்தால் அது விசேஷம் கண் என்று சொல்வார்கள்.
🌹 இரண்டு கட்டையிலும் (0), (1) என வந்தால் (12) என்று சொல்வார்கள்.
🌹 அப்படி இரண்டு தாயக்கட்டையும் உருட்டிக் கொண்டே இருந்தால் (12), (1), (2), (3), (4), (5), (6) வரை விழுவதற்கான சந்தர்ப்பம் இருக்கும்.
🌹 ஆனால் தாயக்கட்டையை எத்தனை முறை உருட்டினாலும் (7), (8), (9) ….விழாது
🌹 அப்படி என்றால் அந்த தாயக்கட்டைக்கு (7), (8), (9) …. விழக்கூடாது என்று விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
🌹 அதே மாதிரி கடவுள் என்னுடைய Design Pattern – ல் எனக்கு ஏதோ ஒன்று இல்லாத மாதிரி படைத்திருக்கிறார்
🌹 நான் உயிராகவே இருப்பேனா என்றால் அது Design Pattern – ல் இல்லை.
🌹 ஆரோக்கியமாகவே இருப்பேனா என்றால் அது Design Pattern – ல் இல்லை.
🌹 இந்த உலகத்தை கண்களால் மட்டும் தான் பார்க்கின்ற மாதிரி Design Pattern இருக்கிறது.
🌹 நகக்கண் என்று சொல்வதால் அதைக் கொண்டு பார்க்க முடியாது.
🌹 ஆனால் ஒரு Camera கண்டுபிடித்து அதை நகக்கண்ணில் வைத்து அந்தப் பதிவை Monitor மூலம் எனது கண்களால் பார்க்க முடியும்.
🌹 அப்படி என்றால் கடவுள் மூன்றாவதாகவும் ஒரு Option கொடுத்திருக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்
🌹 இரண்டு தாயக்கட்டையை உருட்டும்போது (7), (8), (9) …. விழாது ஆனால் மூன்றாவதாக ஒரு தாயக்கட்டை சேர்த்து உருட்டினால் (7), (8), (9) …. ஐ விழ செய்யலாம் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 இறைவன் எனக்கு அந்த மாதிரி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறான்.
🌹 அதனால் வெற்றி தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்டதா? என்றால்,
🌹 நான் இப்படித்தான் வாழ்வேன் என்ற முடிவெடுத்து விட்டு அப்படியே வாழலாம்.
🌹 இல்லையென்றால் எல்லா எல்லைக்கோட்டையும் அழித்துவிட்டும் வாழலாம்.
🌹 எல்லாமே என்னுடைய விருப்பம் தான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025