ஜீவசமாதி அடைந்தவர் சூட்சுமமாக இருந்து மற்றவரும் ஞானமடைய உதவி செய்வாரா?
🌹 ஒரு மனிதன் வாழும் போது எண்ணத்தோடு இருக்கிறான்.
🌹 அந்த எண்ணம் மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று இருக்கிறது.
🌹 அந்த மனிதன் நேரில் போக வேண்டிய அவசியம் இல்லை.
🌹 ஆனால் அந்த எண்ணமே மற்றவர்களை காப்பாற்றும்.
🌹 நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் அந்த எண்ணமே உங்களை காப்பாற்றும்.
(உயிர் என்னோடு இருக்கையிலே நீ மண்ணோடு போவதெங்கே).
🌹 கணவனும், மனைவியோ, நண்பனோ உண்மையிலேயே நீங்கள் யாரையோ நேசிக்கிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள் அல்லது அவர் வாழ்க்கையின் மீது நலன் கொள்கிறீர்கள் என்றால் அவ்வளவு எளிதாக சாக முடியாது.
🌹 ஏனென்றால் எனக்கு ஒரு தேவை இருக்கிறது. நான் இன்னொருவருக்கு உதவ வேண்டும். இதையெல்லாம் முடிக்காமல் உடலை விட்டு விடக்கூடாது என்ற பயம் இருப்பதனால் என்னால் எளிதில் சாக முடியாது.
🌹 யாராவது நம்மை நினைத்தால் விக்கல் வருவது யாரோ ஒருவர் இறந்து விட்டால் நம்மால் சாப்பிட முடியாது யாரோ ஒருவரை நினைத்துக் கொண்டிருந்தால் அவருடைய அழைப்பு வருவது இவையெல்லாம் நிகழ்காலத்தில் உள்ள எண்ணத்தினால் ஒருவருக்கொருவர் தொடர்பினை ஏற்படுத்துகிறது.
🌹 ஒரு கடவுள் புரிந்த மனிதன்தான் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பான் அவனுடைய உடலை தான் கோவிலாக்கி அதில் சிலை வைத்து தெய்வ வழிபாடுகள் செய்யப்பட்டது.
🌹 அந்த மனதை அந்ராத்மாவாக வைத்துக்கொள்ள தான் மந்திரங்கள் சொல்லி அதை போற்றி வணங்கி வழிபாடு செய்தார்கள். அந்த மனிதனின் மனம் அங்கேயே நின்று விடும். அவர் சமாதி சாதித்தவர் கிடையாது. ஆனால் மன வலிமையை அதிகப்படுத்தியவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியவர்.
🌹 சமாதி என்றால் கடவுளுக்கு நிகராக மாறுதல் ஒன்றுமற்று போதல்.
🌹 இருக்கும்போது எண்ணம் இல்லாமல் ஆனவருக்கு எப்படி இருந்த பின்பு என்னத்தால் உதவ முடியும்.
🌹 அதனால் அந்த்ராத்மாவை வழிபடும் இடங்கள் எல்லாம் என்னால் நான் சமாதி சாதிப்பதற்கு வழிகாட்ட முடியாது.
🌹 அந்த இடத்தில் தெய்வத்திற்கு ஏதோ ஒன்றைக் கொடுத்து தான் ஏதோ ஒன்று பெறுவது போல இருக்கும்.
ஆனால் கடவுளுக்கு அப்படி கிடையாது. உங்களை வளமாகவும் கொண்டாட்டமாகும் வைத்திருப்பது தான் கடவுளை வணங்குவது.அது எளிமையானதும் கூட
🌹 நான் படைக்கப்பட்டதன் நோக்கமே எனது கொண்டு கொண்டாடி கடவுளை அனுபவிக்க தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
🌹 ஜீவசமாதி என்ற பெயரில் அந்ராத்மாவாக மாறினால் அதற்குப் பெயர் ஞானம் கிடையாது. இறைவனை அடைந்ததாகவும் சொல்ல முடியாது.
🌹 இயல்பாகவே சமாதியை பற்றிய அறிவை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். நான் ஒவ்வொரு நாளும் தூங்குகிறேன்.கனவுகளற்ற நிலையில் ஒன்றும் இல்லாமல் எண்ணம் இல்லாமல் இருக்கிறேன் என்று.
🌹 விழிப்பு நிலையிலும் இதை அடைந்தவர் தான் சமாதி (சம – ஆதி) சாதித்தவர்.
🌹 அதனால் , ஒரு குருவாக நான் சொல்கிறேன் கடவுள் ஒன்றுதான். அது எல்லோருக்குமானது எனது பயிற்சியே சமாதி சாதிக்க போதுமானது.
🌹 மற்றபடி ஜீவசமாதி ஜல சமாதி நெருப்பு சமாதி எல்லாம் உங்களுடைய பிரச்சனை அதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025