ஞானமடைந்தவர் எப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடிகிறது?
🌹 ஞானம் (தெளிவு) அடைந்த மாதிரி பேசுபவர்களுக்கு முன் உதாரணத்திற்கு ஒரு புத்தகம் தேவைப்படும்.
🌹 அவர்கள் கீதையோ பைபிளோ குரானோ ஏதோ ஒரு புத்தகத்தை வைத்து சம்பந்தப்படுத்தி பேசிக் கொண்டிருப்பார்கள்.
🌹 இந்து மதத்தில் மட்டும் தான் ஞானத்தை புரிய வைப்பதற்கு நிறைய கதைகளும், நூல்களும் இருக்கிறது.
🌹 இப்போது ஞானம் அடைந்தவரால் எப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முடிகிறது என்றால்
🌹 தகவல்களை எல்லாம் ஒரு பென்டிரைவிலோ அல்லது ஒரு சிப்பிலோ பதிவு செய்து வைத்திருந்து தேவைப்படும்போது எடுத்துப் பார்ப்பது போல் நமது மூளையிலும் ஏதோ ஒரு தகவலை பெற்று பதிவு செய்து அதைக் கொண்டு பதில் அளிப்பது அல்ல ஞானம் அடைந்தவரின் பதில்.
🌹 சூரியன் தோன்றி மறைவதால் தான் இரவு பகல் தோன்றுகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் தான் இரவு பகல் தோன்றி நாட்கள் கழிகின்றன என்ற ஒரு தகவலை தருகிறார்கள்.
🌹 இது ஒரு ஞானிக்கு எப்படி புரிகிறது என்றால், சம்பவம் ஒன்று நடக்கிறது. அதில் எனக்கு ஒன்று புரிகிறது ஆனால் அதை தவறு என்று அறிவியல் நிரூபிக்கிறது. இருந்தாலும் எனக்கு நான் தான் சரி என்று புரியும்.
🌹 அறிவியல் பூர்வமாக பூமி சூரியனை சுற்றுவதால் தான் இரவு பகல் தோன்றுகிறது என்பது சரி என்றாலுமே நான் எனது புலன்களை கொண்டு பார்க்கும்போது சூரியன் தோன்றி மறைவதால் தான் இரவு பகல் தான் தோன்றுகிறது என்று எனக்கு புரிவதுதான் ஞானம்.
🌹 என்னுடைய புலன்களால் பூமி சுற்றுவதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு தான் இறைவன் என்னை படைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவன் தான் ஞானி.
🌹 அதனால் ஞானம் என்பது படிப்பு கிடையாது. நான் நடைமுறையில் என்ன பார்க்கிறேனோ, எனக்கு என்ன சம்பவம் நடக்கிறதோ அதை புரிந்து கொள்வதுதான் ஞானம்.
🌹 அதாவது கடவுள் என்னை அறிவோடு படைக்கவில்லை ஞானத்தோடு படைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்வது தான் ஞானம்.
🌹 அறிவு என்றால் பூமி சுற்றுவதால் இரவு பகல் உண்டாகிறது என படிப்பது. ஞானம் என்றால் சூரியன் தோன்றி மறைவதால் இரவு பகல் உண்டாகிறது என உணர்வது.
🌹 அதனால் ஞானி என்பவர் உணர்ந்து தெளிந்து விட்டார். அதனால் அவரால் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடிகிறது. கற்றுக்கொண்ட அறிவு தான் ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறது.
🌹 ஒரு ஞானி கடவுள் ஒன்றுதான், வாழ்க்கை என்பது கொண்டாடுவதற்கு மட்டும் தான். என்பதை புரிந்து வைத்திருப்பார்.
🌹 அதனால் ஞானம் ஊறினால், புரிதல் ஏற்பட்டுவிட்டால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு வந்து விட்டால் எந்த கேள்வி கேட்டாலும் பதில் ஒன்றாகத்தான் இருக்கும்.
🌹 நான் உங்களுக்கு சொல்கின்ற பதிலும் எனக்கு முன்னால் ஞானம் அடைந்த மனிதர்களின் புத்தகங்களின் உள்ள பதிலும் ஒன்றாக தான் இருக்கும்.
🌹 அதனால் ஒரு ஞானி தன்னை மதிப்பதால் ஞானிக்கு மற்றோரு புத்தகத்தை பார்த்து பதிலளிக்க வேண்டிய அவசியம் என்பது இருக்காது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025