பாவித்தல் என்றால் என்ன? யாரை பாவிக்க வேண்டும்?
🌹 பாவனை, பாவித்தல் என்று நாடகம் அல்லது இலக்கியத்தில் எல்லாம் சொல்வதுண்டு.
🌹 பாவித்தல் என்றால் ஒன்றைப் போலவே ஒன்றை செய்வது
அதாவது ஒன்றை போலவே வேடமிடுவது.
🌹 கடவுளைப் பற்றி தெரியாமல் நான் பாவிப்பது (கடவுளை பற்றி பேசுவது) எனக்கும் மற்றவருக்கும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
🌹 எனக்கு கடவுள் தெரியும்.
🌹 நான் நிறைய காணொலிப் பதிவில் கூறியிருக்கிறேன் கடவுளை சூன்யம் என்று,
கடவுள் என்ற பொருள் அது பொருள் அற்றது.
பொருளற்றது என்றால் ஒன்று மற்றது.
அந்த ஒன்றுமே இல்லாத ஒன்றுதான் எல்லாவற்றையும் செய்திருக்கிறது.
🌹 இப்போது நான் கடவுளை (ஒன்றுமே இல்லாத ஒன்றை) பாவிக்க வேண்டும் என்றால் நானும் ஒன்றும் இல்லாமல் ஆக வேண்டும்.
🌹 தூங்கும்போது என் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. அங்கே நான் என்பது கிடையாது.
🌹 அப்படி நான் விழிப்புடன் வாழும்போது கூட நான் என்ற ஒன்று இல்லாமல் செயல்பட வேண்டும் அந்த பாவித்தல் தான் பாவித்தல்.
🌹 ஆனால் இங்கே பாவித்தல் என்பது மதச்சடங்கோ அல்லது வேடதாரமோ கிடையாது.
🌹 கடவுளை பாவித்தல் என்றால் ஒன்றுமே இல்லாமல் இருப்பது.
🌹 கடவுளை நிர்குண பரப்பிரம்ம கருணாகர என்று சொல்வதுண்டு.
🌹 கடவுளே எல்லாவற்றையும் படைத்து விட்டு ஒன்றுமில்லாமல் இருக்கும்போது நான் எப்படி இருக்க வேண்டும் என்று பாவிப்பது தான் பாவித்தல்.
🌹 கடவுளுக்கு சர்வவியாபி என்ற பெயரும் உண்டு.
🌹 கடவுள் (வெற்றிடம்) எங்குமாக வியாபித்து இருக்கிறது.
🌹 நான் பொருள் மீது அக்கறை கொண்டு பொருள் மயக்கம் கொள்கிறேன்.
🌹 பொருள்மேல் அக்கறையில்லாமல் ஆனால் மட்டும் தான் என்னால் பாவிக்க முடியும்.
🌹 இந்தப் பாவித்தலுக்கு தான் பயிற்சி முயற்சி எல்லாம் தேவைப்படுகிறது.
🌹 அப்படி இல்லை என்றால் சித்தர் பெருமக்களோ, மகான்களோ, நம் முன்னோர்களோ இதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
🌹 மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.
🌹 மலர் மீது ஏறி உட்காந்து அங்கே அமைதியாகிவிட்டால் மட்டும் தான் பாவித்தல் என்பது சாத்தியப்படும்.
🌹 அந்த மனிதன் மட்டும்தான் பக்தி உள்ள மனிதன்.
🌹 அந்த நிலையை அடைவது தான் மிகவும் கடினமாகவும், மிகவும் எளிதாகவும் உள்ளது.
🌹 நான் என்னை விடுவது எளிது ஆனால் இந்த சமூகம் என்னை மதிக்காமல் போய்விடுமோ என்று நினைப்பதால் அது கடினம் ஆகிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025