உண்மையை உணர்த்த குருவாக நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன?
🌹 என்னுடைய இயல்பே எதையும் நான் சாதாரணமாக ஒத்துக் கொள்ள மாட்டேன்.
🌹 நான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுள்ள குடும்பத்தில் பிறந்ததாலும், அதனால் என்னை சுற்றி உள்ள மனிதர்கள் புறக்கணித்ததாலும், ஏன் என்னை புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்வியும், ஆராய்ச்சி மனப்பான்மையும் குழந்தை பருவத்திலிருந்தே எனக்கு இயல்பாக இருக்கிறது.
🌹 நான் நிறைய மத நூல்களை படித்திருக்கிறேன். அதனாலேயே மத சடங்குகளில் உள்ள தவறை பற்றி பேசி 70 நாட்கள் சிறைக்கு சென்றிருக்கிறேன்.
🌹 அதனால் இப்போது எந்த பெயரையும் பயன்படுத்தாமல் பேச ஆரம்பித்து இருக்கிறேன்.
🌹 என்னுடைய சீடர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்,
🌹 நீங்கள் ஏதோ ஒரு மதத்திலையோ அல்லது ஜாதியிலேயோ இருக்கிறீர்கள் என்றால் உங்களால் அதைத் தாண்டி உங்களால் சிந்திக்க முடியாது.
🌹 உங்களுடைய உணவு ஒழுக்கமும், உடை ஒழுக்கமும் நீங்கள் பெரியவன் என்று மற்றவர்களிடம் நிரூபிக்கும் முயற்சியில் இருக்கிறது.
🌹 நீங்கள் கற்றுக் கொண்டதை வைத்து நான் பெரியவன் என்று மற்றவர்களிடம் நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
🌹 உண்மையிலேயே நீங்கள் பெரியவன் என்று உங்களுக்கு தெரிந்து விட்டால் அதை மற்றவர்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமே இருக்காது.
🌹 ஐந்தறிவுள்ள எந்த ஜீவனும் யாரிடமும் தன்னை நிரூபிக்காமல் கொண்டாட்டமாக இருக்கிறது.
🌹 ஆனால், ஆறாவது அறிவு (பகுத்தறிவு) வந்தவுடன் மனிதன் தன்னை நிரூபிக்கும் முயற்சியில் தன் இயல்பை இழந்து போராடிக் கொண்டிருக்கிறான்.
🌹 எனக்கு எங்கே வலிக்கிறது? எங்கே சிரமமாக இருக்கிறது என்றால் நான் உண்மையை எவ்வளவு எளிமையாக சொன்னாலும், அதை இந்த மனிதர்கள்புரிந்து கொள்வதில்லை என்பதால் தான்.
🌹 இதைவிட இன்னும் எளிமையாக எப்படி உண்மையை புரிய வைப்பது என்று தான் எனக்கு சிரமமாக இருக்கிறது.
🌹 நான் ஒவ்வொரு முறை பேசும்போதும், உண்மையை புரிய வைக்க இன்னும் எளிமையாக எப்படி பேசுவது என்று தான் சிந்திக்கிறேன்.
🌹 அம்மா குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்காக பொய்யான கதைகளை சொல்லி உணவினை ஊட்டுவதைப் போல் என்னால் பொய் சொல்லி புரிய வைக்க முடியவில்லை அதுதான் என்னுடைய பிரச்சனை.
🌹 நிறைய மனிதர்கள் நான் பொய்யாக பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
🌹 நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்து கொண்டு மது அருந்துவேன் என்று சொல்லாதீர்கள் என்றும்,
🌹 கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்றும்,
🌹 அதனால் ஆன்மீகமே அசிங்கப்படுகிறது என்றும்,
🌹 நீங்கள் ஆன்மீகவாதியாக இருப்பதற்கான தகுதி அற்றவர் என்றும், Command ல் எழுதுவதுண்டு.
🌹 நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால்,
🌹 நான் ஆன்மீகத்திற்கு தகுதியானவனா இல்லையா என்பது எனக்குத் தான் தெரியும்.
🌹 நீங்கள் மது அருந்துவதும், அருந்தாததும் உங்களுடைய விருப்பம்.
🌹 நீங்கள் மது அருந்தினால் தான் ஆன்மீகவாதி என்று நான் சொல்லவில்லை.
🌹 ஆனால் மது அருந்துபவராக இருந்தாலும் கடவுளை புரிந்து கொள்ள முடியும். ஆன்மீகவாதியாக வாழ முடியும் என்பதால் தான் நான் மது அருந்துவேன் என்ற உண்மையை என்னால் சொல்ல முடிகிறது.
🌹 நான் என்னுடைய பேச்சில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதற்கான காரணம், அந்த வார்த்தைகளை கடந்து என்னுடைய வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்,
🌹 சமூகத்தில் கெட்ட வார்த்தை என்று கற்றுக்கொண்டு அதை கடக்க முடியாத ஒரு மனிதனால்,எப்படி தான் தவறாக கற்றுக் கொண்ட விஷயங்களை எல்லாம் கடக்க முடியும்.
🌹 அந்த மாதிரியான மனிதர்கள் என்னுடைய வீடியோக்களை பார்க்க கூடாது என்பதற்காக தான், நான் சமூகத்தில் கற்றுக் கொண்ட கெட்ட வார்த்தைகளை என்னுடைய வீடியோக்களில் பயன்படுத்துகிறேன்.
🌹 ஆனால் தேடல் உள்ள மனிதன் கட்டாயம் வார்த்தைகளை கடந்து தெளிந்து விடுவான்.
🌹 எப்போதுமே உண்மை வெற்றி பெறும். உண்மை நிலையாகவும் இருக்கும்.
🌹 அதை மனிதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், காலத்தால் வெளிப்படும்.
🌹 அதனால்உண்மை உண்மைதான், அதை யாராலும் சிதைக்க முடியாது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025