சில கூட்டு குடும்பங்கள் ஒற்றுமையுடன் இருப்பதன் ரகசியம் என்ன?
🌹 ஒற்றுமையுடன் இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளலாம்.
🌹 உண்மையிலேயே ஒவ்வொரு மனிதனும் தனித்தனி.
🌹 சில கூட்டுக் குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம்,
🌹 அதில் ஒருவர் உயர்ந்த இடத்தில் இருப்பார்.
🌹 அம்மா பெயரில் சொத்து இருக்கும்.
🌹 அதனால் மாமியார், மருமகள் சண்டை என்பது இருக்காது.
🌹 அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக தான் இருப்பார்கள்.
🎶 உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலுக்கு கூட மிதிக்கும் 🎶.என்றெல்லாம் பாடல்கள் உண்டு.
🌹 மனிதன் ஒற்றுமையாக வாழ தகுதியானவன்.
🌹 ஆனால், ஒற்றுமையாக வாழ்வதற்கு முற்படாதவன்.
🌹 உண்மையிலேயே ஒற்றுமையாக வாழ்வதற்கு என்ன வழி என்றால்,
🌹 நீ நீயாக இரு.
🌹 நான் நானாக இருக்கிறேன்.
🌹 என்று நினைத்தாலே போதும் யார் வேண்டுமானாலும் ஒற்றுமையாக வாழலாம்.
🌹 அப்படி இல்லாமல் , நான் சொல்வதை எல்லாம் நீ செய். நீ சொல்வதெல்லாம் நான் செய்கிறேன் என்று செயல்பட்டால் சத்தியமாக ஒற்றுமையாக வாழ முடியாது.
🌹 எங்கு ஒருவர் சுதந்திரமாக இருக்கிறாரோ, அங்கே தான் ஒற்றுமையாக இருப்பார்.
🌹 சுதந்திரம் இல்லாத இடத்தில் ஒருவரால் ஒற்றுமையாக இருக்க முடியாது.
🌹 அதனால் தனி மனித சுதந்திரம் தான் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025