உங்களை வாலிப வயதிலேயே பார்த்திருந்தால் வாழ்க்கை நல்லா இருத்திருக்கும் என்ற ஏக்கம் வருவது சரியா?
🌹 16 வயதில் நான் ஒரு குருவை சந்தித்து அவர் என்னை கொண்டாட்டமாக வாழ சொல்லி இருந்தால் கூச்சப்படாமல் இளமையில் அனைத்தையும் ரசித்திருப்பேன்.
🌹 இப்போது எனக்கு 45 வயது ஆன பின்பு என்னை கொண்டாட்டமாக இருக்கச் சொன்னால் நான் எப்படி இருப்பது என்று மனம் ஏங்குவது நியாயமானது தான்.
🌹 ஏனென்றால் குழந்தையாக இருக்கும்போதும், வளரும் போதும், வயது முதிரும் போதும் நான் வேறு வேறு மனநிலையில் இருந்திருப்பேன்.
🌹 நான் சொல்கிறேன் உங்களுக்கு 45 வயதிலாவது பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என்று.
🌹 பார்த்தும் கண்டுகொள்ளாத மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
🌹 நீங்கள் அதையெல்லாம் தாண்டி தானே வந்திருக்கிறீர்கள்.
🌹 பத்து முறை விழுந்த மனிதனைப் பார்த்து பூமித்தாய் சொல்வாளாம் ஒன்பது முறை எழுந்தவன் என்று.
🌹 அதனால் எனது இருப்பிலிருந்து நான் சரியாக வாழ ஆரம்பிக்க வேண்டும்.
🌹 இப்பொழுது என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய வேண்டும்.
🌹 நான் புத்தர் காலத்தில் வாழவில்லை அதற்காக மீண்டும் புத்தர் காலத்திற்கு சென்று வாழ முடியுமா என்றால் முடியாது.
🌹 ஏனென்றால் அது கடந்த காலம்.
🌹 ஆகையால், ஆனது ஆகட்டும் இனியாவது நெஞ்சம் புனிதம் ஆகட்டும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025