ஊழல் இல்லாத ஆட்சி சாத்தியமா?
🌹 ஊழல் என்றால் என்ன ? என்பதை பற்றிய தெளிவு வேண்டும்.
🌹 ஒரு மனிதனிடமிருந்து ஒரு பொருளை எடுத்தால் அதன் பெயர் திருட்டு.
🌹 ஒரு மனிதனை ஏமாற்றினால் அதன் பெயர் ஏமாற்றுவது.
🌹 இந்த மனிதன் தான் ஏமாந்து விட்டான் என்று ஒருவரை குறிப்பிட முடியாமல் செய்யும் திருட்டுக்குப் பெயர் ஊழல்.
🌹 ஊழல் என்றால், அவர் செய்த திருட்டுக்கு ஒரு தனிநபரால் உரிமைகொண்டாட முடியாது.
🌹 ஒருவர் 5’’ Inch ரோடு போடுவதற்கு Contract எடுத்து, 3’’ Inch ரோடு போடுகிறார். இப்போது யார் ஊழல் செய்தார்கள் என்று அவரிடம் கேட்டால்,
🌹 தாரை தேர்ந்தெடுத்து கொடுப்பதற்கு வேறு ஒரு அதிகாரி இருக்கிறார்,
🌹 ஜல்லியை தேர்ந்தெடுத்து கொடுப்பதற்கு வேறு ஒரு அதிகாரி இருக்கிறார்,
🌹 Mixing செய்வதை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு அதிகாரி இருக்கிறார்,
🌹 அவர்கள் தேர்ந்தெடுத்து கொடுத்த பொருட்களின் அளவை பொருத்து தான் என்னால் ரோடு போட முடியும் என்று சொல்கிறார்.
🌹 அவர் மீது வழக்கு தொடுத்தால் அது நிற்காது. ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா அதிகாரிகள் இருக்கிறார்கள்.
🌹 இதுதான் ஊழல்.
🌹 ஊழல் இல்லாத அரசாங்கம் உருவாக வேண்டும் என்றால்,
🌹 அந்த அரசின் கீழ் பணி புரியும் அனைவரும், எனக்கான ஊதியமே போதும் என்று தன்னளவில் நிறைவு பெற்ற மனிதனாக இருக்க வேண்டும்.
🌹 அந்த மாதிரியான மனிதர்களை தான் அரசும் பணி நியமனம் செய்ய வேண்டும்.
🌹 ஊழல் இல்லாத ஒரு அரசு உருவாக வேண்டும் என்றால்,
🌹 ஒவ்வொரு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், மனதிற்குள், போதும் என்ற மனநிலை உள்ளவராக இருக்க வேண்டும்.
🌹 ஜாதி கட்சியை ஆதரிப்பவன், போதும் என்ற மனநிலை உள்ள மனிதன் கிடையாது.
🌹 வாரிசு அரசியலை ஆதரிப்பவன், போதும் என்ற மனநிலை உள்ள மனிதன் கிடையாது.
🌹 நான் ஒரு அதிகாரி என்று நினைப்பில் செயல்படுபவன், போதும் என்ற மனநிலை உள்ள மனிதன் கிடையாது.
🌹 அதனால், நிறைவான மனிதனை தேர்ந்தெடுப்பது தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
🌹 நிறைவான ஒரு மனிதன், ஓட்டு கூட கேட்க மாட்டான்.
🌹 ஊழல் ஓட்டு போடும் போதே ஆரம்பித்துவிட்டது. இவர் நமக்குத் தெரிந்தவர் என்பதால் மட்டும் ஓட்டு போடுகிறோம்.
🌹 ஆனால், இவர் நிறைவு பெற்றவரா,போதும் என்ற மனநிலை உள்ளவரா என்று பார்த்து ஓட்டு போடுவதில்லை.
🌹 தேர்தலில் நிற்பவர் வீடு கட்டி இருக்கிறாரா? வசதியாக இருக்கிறாரா? பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறாரா? என்று அவரைப் பற்றி விவரங்கள் ஏதும் மக்களுக்கு தெரிவிப்பதில்லை.
🌹 தேர்தல் ஆணையமும் தேர்தலில் நிற்பவரை பற்றிய விபரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை.
🌹 எந்த ஒரு தனி மனிதனும் தேர்தலில் நிற்பவரை ஆராய்ச்சி செய்து ஓட்டு போடுவது கிடையாது.
🌹 அவர் விளம்பரமானவரா ? நடிகரா ? நடிகையா ?
🌹 எனக்கு தெரிந்தவரா ?
🌹 எனது ஜாதிக்காரரா ?
🌹 ஓட்டுக்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கிறார் ?
🌹 ஓட்டுக்கு என்னென்ன பொருள் வாங்கி கொடுக்கிறார் ?
🌹 என்பதை பார்த்து நான் ஓட்டு போட்டால், எப்படி, ஊழல் இல்லாமல் போகும்.
🌹 ஓட்டு போடுவது எப்படி ?
🌹 ஓட்டு ஏன் போட வேண்டும் ?
🌹 ஓட்டு யாருக்கு போட வேண்டும் ? என்று எந்தப் பாடத்திட்டத்திலும் சொல்லிக் கொடுப்பதில்லை.
🌹 அதனால், ஓட்டு போடுபவர் ஒழுங்காக இருந்தால், ரோடு போடுபவரும் ஒழுங்காக தான் போட்டிருப்பார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025