நான் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதை மாற்றிக்கொள்வது எப்படி?
🌹 மனிதன் மோசமானவன். யாரையும் ஏளனமாக பார்ப்பதில் குறை வைக்காதவன்.
🌹 ஒவ்வொரு ஆணும் தாலி கட்டியவுடன் மனைவியை ஏளனமாக பார்க்கிறான்.
🌹 ஒவ்வொரு பெண்ணும் தாலி கட்டியவுடன் கணவனை ஏளனமாக பார்க்கிறாள்.
🌹 ஒருவரை ஏளனமாக பார்க்கும் பண்பு நமக்கு ஏன் வந்தது என்றால் பகுத்தறிவு தான் காரணம்.
🌹 பகுத்தறிவினால்,
🌹 ஒருவரை உயர்வாக பார்க்கிறோம்.
🌹 ஒருவரை ஏளனமாக பார்க்கிறோம்.
🌹 ஆனால் சமமாகவோ,
🌹 உள்ளதே உள்ளபடியோ பார்க்க முடியாத அளவுக்கு நாம் கற்றுக்கொண்டோம்.
🌹 இதை எப்படி சரி செய்து கொள்வது என்றால்,
🌹 யார் மீதும், எதன் மீதும் அன்பாகிவிட்டால் ஏளனமாக பார்க்க முடியாது.
🌹 ஒவ்வொருவரும் அவருக்கு தெரிந்த படி தான் வாழ்வார்.
🌹 ஒவ்வொருவரும் அவருடைய விருப்பத்தை தான் நிறைவேற்றிக் கொள்ள முற்படுவார்.
🌹 என்பதை நான் புரிந்து கொண்டால் யாரையும் ஏளனமாக பார்க்க முடியாது.
🌹 முதலில் நான் என்னைக் கொண்டு தான் பிறரை ஏளனமாக பார்க்கிறேன். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 நான் என்னை உயர்வாக பார்த்து பிறரை ஏளனமாக பார்க்கிறேன்.
🌹 நான் என்னை ஏளனமாக பார்த்து பிறரை உயர்வாக பார்க்கிறேன்.
🌹 அதுபோல, ஒருவருடைய விருப்பத்தேர்வுக்கும், சுதந்திரத்திற்கும் குறுக்காக இருப்பதும் அவரை ஏளனமாக பார்ப்பது தான்.
🌹 நீங்கள் யாரையும் கட்டாயப்படுத்தாத போது, அவருடைய சுதந்திரத்தில் தலையிடாத போது அவரை நீங்கள் ஏளனமாக பார்க்கவில்லை என்று சொல்லலாம்.
🌹 உங்களுக்குள் அன்பு மலர்ந்து, அன்பினாலே செயல்பட ஆரம்பித்தீர்கள் என்றால் அடுத்தவரை ஏளனமாக பார்க்க வேண்டும் என்ற புத்தி வராது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025