கற்றதனால் ஏற்பட்ட மன உளைச்சலை சரி செய்யமுடியுமா?
🌹 நான் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டேன்.
🌹 அது எனக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
🌹 அதை எப்படி அழிப்பது என்றால் மிக சுலபம்.
🌹 நீங்கள் ஜாதகம் பார்க்க சரியாகவோ, தவறாகவோ கற்றுக் கொண்டீர்கள்.
🌹 நீங்கள் யாரை பார்த்தாலும், அவர் இந்த கிரகத்தில் பிறந்திருப்பார். அவருக்கு இந்த கிரகத்துடைய ஆதிக்கம் இருக்கும் என்று ஜாதகம் சார்ந்த எண்ணங்கள் எழுப்பி கொண்டே இருப்பது உங்களுக்கு சிரமமாக இருப்பதால், ஜாதகம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறீர்கள்.
🌹 இப்போது நீங்கள் கற்றதை எப்படி அழிப்பது என்றால், .
🌹 அந்த எண்ணம் எழும்பும்போதே, இது எனக்கு தேவையற்றது என்று நிறுத்துவது தான் நீங்கள் கற்றுக் கொண்டதை மறப்பதற்கான வழி.
🌹 ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கற்றுக் கொண்ட ஒருவன் இருக்கிறான்.
🌹 அவன் நிறைய தகவல்களை கற்றுக் கொண்டு அதில் லயித்து அடம் பிடித்துக் கொண்டு இருக்கிறான்.
🌹 சதா சர்வ காலமும் பேசிக் கொண்டிருக்கும் அவனை வெல்வது தான் உங்களுடைய தலையாய கடமை.
🌹 உங்களை வெல்வது தான் உங்களுடைய வேலை.
🌹 அதற்குத்தான் குருவும் தேவைப்படுகிறது
🌹 குரு என்பவன் யார் என்றால்,
🌹 உங்களுக்கு உள்ளே இருப்பவனிடமிருந்து வெற்றி பெற வைப்பவர்
🌹 உங்களுக்கு உள்ளே இருப்பவனை திருத்துபவர்.
🌹 உங்களுக்கு உள்ளே இருப்பவனை மாற்றுபவர்.
🌹 நீங்கள் வெளியில் தெளிவாக இருப்பது போல் நடிக்க முடியும்.
🌹 ஆனால் உங்களுக்கு உள்ளே இருப்பவனிடம் நடிக்க முடியாது.
🌹 அவன் உங்களிடம் பேசிக் கொண்டே இருப்பான்.
🌹 அதனால், அவனிடம் தான் நீங்கள் ஒழுங்காக பேச வேண்டும்.
🎶 உன்னோடு நான் உண்டானவன் உள்ளத்தின் குரல் என்றானவன் 🎶
🌹 மதம் சொல்வதைக் கேட்டு நான் சடங்கு செய்ததைப் போல,
🌹 அதாவது, இது பிள்ளையார் அதை கும்பிடு, தோப்புக்கரணம் போடு என்று எனக்கு வெளியே யாரோ சொல்கிறார் என்றால்,
🌹 அதை உள்ளே இருப்பவன் மனப்பாடம் செய்து கொள்கிறான்.
🌹 இப்போது நான் ஒரு பிள்ளையார் சிலையை பார்த்தால்,எனக்கு உள்ளே இருப்பவன் அந்த சிலையை கும்பிடவும், தோப்புக்கரணம் போடவும் சொல்கிறான்.
🌹 அதனால் நான் அவனுக்கு கீழ்படிந்து செய்கிறேன்.
🌹 ஞானம் என்றால் உள்ளே இருப்பவனுக்கு கீழ்படிவது கிடையாது. அவனை வேலைக்காரனாக வைத்துக் கொள்வது தான் ஞானம்.
🌹 ஆனால் அவன் எஜமானாக இருந்து, என்னை வேலைக்காரனாக்கி அவன் கற்றுக் கொண்டதை செய்ய சொல்கிறான்.
🌹 அதனால் கற்றுக் கொண்டவனை வேலைக்காரன் ஆக்கி, நீ கற்றுக் கொண்டது எல்லாம் சரிதானா என்று திட்டி அவனை அடிமைப்படுத்த வேண்டும்.
🌹 நான் அப்படிதான் வெளியில் இருந்து உங்கள் உள்ளே இருக்கும் வேலைக்காரனை பார்த்து திட்டுகிறேன்.
🌹 ஆனால்,நீங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்பதால் அவனை திட்டினால் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.
🌹 அதனால், அவனை எஜமானாக்கி வைக்காதீர்கள். வேலைக்காரனாக வையுங்கள்.
🌹 ஏனென்றால், வேலைக்காரன் தான் உங்கள் பேச்சை கேட்பான்.
🌹 அவன் எஜமான் ஆனால் உங்களை ஆட்டி வைப்பான்.
🌹 அதை, நீங்கள் வெளியில் பார்க்கலாம். படித்த மனிதன் எஜமான் ஆகி வேலைக்காரனை ஆட்டி வைக்கிறான். ஆனால் ஒன்றும் தெரியாத அழகான (குழந்தை மனம் கொண்ட) மனிதன் படித்தவனுக்கு அடிமையாகி வேலைக்காரன் ஆகிவிட்டான்.
🌹 அதனால் ,
கற்றதெல்லாம் மறப்பது தான் கலை .
🌹 ஒன்றை கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் மறப்பது தான் கடினம்.
🌹 அதனால் நீங்கள் மறப்பதற்கு தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
🌹 உண்டதெல்லாம் மலமே, கற்றதெல்லாம் வீணே என்று இதைத்தான் சொல்கிறார்கள்.
🌹 அதனால், வேலைக்காரனை தலை தூக்க விடாமல் அடிக்க வேண்டியது உங்கள் கடமை.
🌹 நீங்கள் யோகம் தியானம் செய்கிறீர்கள் என்றால்,அது கற்றதை மறக்கத்தான் உதவும்.
🌹 அப்படியில்லை என்றால், நீங்கள் கற்றதை மறந்தால் தான் யோகம், தியானம் செய்வதற்கான பலன் கிடைக்கும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025