திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ஜாதிவேற்றுமை
(தரு)
சாதிகுலமானவகைசபையிலாண்டே- நின்று
சாற்றுகிறேன்சாதகமா யானறிந்தாண்டே.
📖 பாடல் எண்: (0555) 📖
ஆதிகுருவானசிவநாதவிந்துமே- சுழியி
லணுகிமுனைபெருகியா கமம்வந்து
வீதியெனுந்திருவாலங்காட்டகத்திலே- சேர்ந்து
மிகுத்தசுக்கிலமென்றுங்குலங்காணுமாண்டே
நீதியெனும்மூலம்விட்டுநாதவிந்துமே- பரையில்
நின்றிலங்குஞ்சுக்கிலத்தாலெடுத்தவுடல்தான்
சோதியிதுஞானகுலஞ் – சாதிபார்
செந்துகளாவதுமொருசாதியிதாண்டே – சாதி.
📖 பாடல் எண்: (0556) 📖
மூலமதிலானசுழிசதுஷ்கோணத்தி – லிலகு
முதலெழுத்தாகுந்தும்பிமுகவனென்றும்
கோலமுள்ளகுஞ்சரத்திலின்செம்புநிறமாவெள்ளை
கூறாகுமெங்கள் குலவம்மிசங்காணும்
ஓராறுதித்தெழுந்துமோங்குபுவியில் – தாங்கி
உதித்துவுருவெடுத்துஉற்பனமதாய்ப்
பாலமுதாகுமேலிங்கத்திருவாலங்காடு – முன்பு
பரப்பிரமமெந்தனுக்குச்சேர்ந்தகுலமாண்டே – சாதி.
📖 பாடல் எண்: (0557) 📖
திருவுரு மேலானநதி அறிவுடைமாயன்
செங்கமலமேவுந்திருசிறந்திருக்கும்நேயன்
கருவூரு நாட்டிலிலகுமதியின்பிறைகோணங்
கல்வியும்வாழ்வுந்தரும்திதிசெய்யுமுபாயன்
மருவுறைஅக்கினிசூழ்ந்தமுக்கோணத்தின்வீடு – அந்த
வட்டத்திலமர்கின்றருத்திரகுலங்காணும்
பறையிருக்கும் நாதவிந்துபரப்பிரமவீடு
இந்தப்பாரில்என்னையறியாமல்பறையனென்றாராண்டே – சாதி.
📖 பாடல் எண்: (0558) 📖
கண்டத்தினுள்ளேயழைத்தறுகோணங்காட்டி – சோதி
கருணைமயேஸ்பரத்தின்வம்மிசத்தானாண்டே
நின்றதமையன்பொய்யல்லஎன்குலங்காண் – சொல்வேன்
நின்புவியில்நீசனென்றுபேர்குறித்தாராண்டே
அண்டபிண்டங்களும்ரெண்டுமொன்றதா – மிரண்டு
மாயிரத்தெட்டிதழினில்யானுதித்தேன்காணும்
என்றுமெவ்வுயிர்க்குமெங்குமெறும்புகடை – யானை
யாருக்குமென்தந்தைசதாசிவன்காணாண்டே – சாதி.
📖 பாடல் எண்: (0559) 📖
பொங்குகடல்சூழுலகம்பதினாலுங் – கூடிப்
புவனமிருநூற்றிருபத்துநாலுமேவும்
எங்குநிறைந்தேயெழுந்துவளர்கின்ற – சோதி
எங்கள்குலஞ்செங்கதிரில்பங்கமில்லைகாணும்
கங்குல்பகலுங்கதிருமதிசூழும் – வானங்
காரணமாகஇரண்டுங்கூடிவருமாயில்
திங்களும்ஞாயிறுமெங்கள்குலமென்மேலாகுஞ்
சேர்ந்ததிந்தப்பறையினால்நேர்ந்ததுஆண்டே- சாதி.
📖 பாடல் எண்: (0560) 📖
கற்றிடுங்கல்விக்குச்சித்தமகிழ்ந்திடும் – புத்தி
கருத்திலிந்துமதியுகந்திடுங்காணுஞ்
சத்தம்பிறக்கையில்கூடசரஸ்வதியுமெங்கள்
சாதியிலுதித்ததெந்தன் தாய்தந்தைகாணாண்டே
வித்தையும்புத்திவிளங்குஞ்சதுஷ்கோணபீட
மெய்ஞ்ஞானகுலத்தில்பிர்மவேதகுலங்காணுஞ்
சுத்தகுலபிர்மசுக சூழுங்கரணாதி
சோதிமயமாதிகுலஞ்சொர்னமயமாண்டே- சாதி.
📖 பாடல் எண்: (0561) 📖
துய்யமதிசூழும்பரைஅம்பரவீதி
சூக்ஷசடாதாரசோதிமூலத்தில்காணும்
வையமுழுதும்படைத்தவாலாம்பிகை – யாண்டே
வாள்புவியுமெங்கள்குலவம்மிசங்காணும்
செய்யதிருகருவூரிலகுமவள் – நாட்டில்
செங்கநதிபொங்குகரையெங்கும்பிரகாசிக்கும்
மையசுழிமூலம்வளர்வாலாம்பிகை – யெங்கள்
வர்க்கத்தில்வாழும்பரைதான்வம்மிசங்காணாண்டே – சாதி.
விருத்தம்
📖 பாடல் எண்: (0562) 📖
சுக்கிலசுரோ ணிதமீது இலகுபரி
பூரணத்தின் செயல்தன் னாலே
எக்குலமும் நாதவிந்தா லெய்தும்வகை
வளப்பமெல்லா மிடரில் லாமல்
பக்குவமா யகத்தியர்தன் னுபதேச
மருளபரி பாஷை யாய்ந்து
திக்குமெட்டுப் பதினாறு கோணமதி
லண்டபிண்டந் திசையு மொன்றே.
📖 பாடல் எண்: (0563) 📖
என்றான மனிதர்பல செனனமொன்று
செந்துவொன்று வுலக மொன்று
நின்றிலங்கும் வானமொன்று புவியுமொன்று
அண்டரண்டம் நிலைதா னொன்று
இன்றுமன்றுங் கதிர்மதியு மின்னலிடி
காற்றுமழை யெல்லா மொன்று
தென்றுலகெ லாம்படைத்த நாதவிந்தா
லெடுத்தவுயிர் செனனமொன்றே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣5️⃣ ஞானவெட்டியான் (564-575) 👈