திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
சிவபூசைசெய்த விவரம் தரு
பூசைகள்செய்தேன் காண்- சிவக்கியான
பூசைகள்செய்தேன்காண்.
📖 பாடல் எண்: (0539) 📖
கட்டாதுவாசிகணக்கில்லையானுமே
கட்டினாலெட்டுடன்மட்டுப்படுமது
எட்டாதுஎட்டுமேகஷ்டமிராதிடில்
அஷ்டதிசைசுத்தியண்டம்பாய்ந்திடவும்
ஒன்பதுவாசல்பஞ்சபூதமாளிகை
ஓராறுசத்துஈராறுமதில்களும்
பொன்புசக்கரக்கோட்டைநவரத்னபீடம்
பூரணச்சந்திரபுஷ்பகரணிசுற்றி- பூசை.
📖 பாடல் எண்: (0540) 📖
அச்சுநகர்சுற்றிஆறதுஏழுமேகச்சிப்பதிக
மாலயஞ்சூழ்நகர்தச்சனுளிபடாதண்டபிண்டங்களும்
மச்சுமாளிகையில்வச்சபொருள்கண்டு
பூட்டுந்திறவுகோல்மூட்டுஞ்சுழிமுனை
பூரணசந்திரபொற்கமலாலயம்
வீட்டிலிருந்துவிளங்குந்
திரவியமெய்ஞ்ஞானபொக்கிஷம்
விந்துநாதத்தொனி- பூசை.
📖 பாடல் எண்: (0541) 📖
சுழிமுனையேவிழிமாய்கைப்பெருங்கடல்
சூக்ஷசடாதாரமூலத்தின்குண்டலி
அழியாமதிமலரர்ச்சனைசெய்து
விந்தமிர்தபானமாராதனைகண்டுயான்
ஆழிக்கடல்கடைந்தமிர்தபானமே
வழியறிந்துமதுவெனுமாறினால்
ஊழியுமேவினையோடிப்பறந்திடும்
வழியறிந்துவினாட்டம்வினாடிகாண்- பூசை.
📖 பாடல் எண்: (0542) 📖
மருவுயர்ந்த கமலமல ராயிரத்தெட்
டிதழின்வளர் மதியை வேண்டித்
திருவுயர்ந்த வம்பிகைப்பெண் சீர்பாத
பங்கயத்தில் தெரிசித் தேதான்
கருவுயர்ந்த வளநாடு தில்லைநதிக்
கரையோரங் கருதி வாழ்ந்தேன்
அருவுருவாய் மெய்ஞ்ஞான மருளியகத்
தியரெனக் கருள்தந் தாரே.
📖 பாடல் எண்: (0543) 📖
இடகலையின் சுழியின்முனை யிலகுமதி
ரவியொளித னியல்பாய் நின்ற
கடல்பெருகு மதுரவின்ப வமுர்தந்தந்து
புகழ்கருணை கருவூர் நாட்டில்
விடமருந்தி சிவரூப ஞானவா
ரியருள்வி ளங்குஞ் சோதி
திடமருவுங் கமலமல ரம்பிகையைப்
போற்றியினி தெரிசித்தேனே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0544) 📖
ஆசைப் பயனுரைத்து வசடுதனைத் தீர்ப்பமென்று
பாசமுகப் பூண்டிந்தப் பார்மீதில் போயுரைத்துக்
காசுபணம் பறிக்குங் கசடர்கள்தான் சொற்கேட்டு
நேசமுடன் பூசைசெய்த நிச்சயம் விளம்புவனே.
📖 பாடல் எண்: (0545) 📖
தீராப் பெருங்கவடு செய்வினையி னாலுரைத்த
நேராப்பொய் யாசை சொல்லி நேர்மையருளாலுரைத்த
ஏராப் பணம்பறிக்கு மிவ்வுலகிற் சூதர்களால்
பேரா விலகுபிதிர்ப் பூசையில் மயங்கினேனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0546) 📖
மனத்திலுந்தான் வளர்ந்த மலர்க்காவி யிரண்டுளதா
இனத்திலிதை யறிந்து இயம்பினேன்- கனத்திலேன்
காரியத்தின் குருவே காரணமாய் நின்றதல்லால்
வீரியமென் றேயுரைப்பர் வீண்.
📖 பாடல் எண்: (0547) 📖
நீட்டியிரு கரத்தால் நெடியகிளை யேவளைத்துக்
கூட்டி மலரெல்லாங் கொய்தேன்காண்- சூட்டியதோர்
கும்பிட்டா லேதாச்சு குவலயத்தி லொன்றுமில்லை
வெம்பிட்டால் பாவம்வரும் வீண்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0548) 📖
உதிக்கின்ற வேளையிலெழுந்தோடி யானவனுட்புகுந்து
கதிக்கின்ற கந்தமலரெடுத் தேன்கன பாவமென்று
விதிக்கின்ற நெஞ்சினில் சற்றறியாமல் விரைந்துகொய்தேன்
துதிக்கின்ற மோக்ஷம் வருமென்று பூசைதுணிந்து செய்தேன்.
📖 பாடல் எண்: (0549) 📖
தீக்கரம் போலவுஞ் சீர்மேவுஞ் சித்தி சிறந்தபின்பு
பார்க்கின்ற பேருக் கலங்கார மாய்க் கனபத்தியுடன்
சேர்க்கையில் தூளித முடல்நதி யாடிய திருடரைப்போல்
ஏர்க்கையில் மந்திர மோதலெனை யன்றி யெதிரில்லையே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0550) 📖
பத்தியுட னொருமலரைக் கரத்தி லேந்திப்
பரிவாகக் கடுகில்பதி னாறிலொன்றை
ஒவம்புட காந்தக்கனக செயல்பா நெருக்கம்
விளங்கும் இந்த நிலையில மருகச் செயல்பாடு
சக்தியுயிர்ட இரஷ்புன் நினைத்த முகம் திருப்பும்
சக்தியுயிர் விளங்கும் நினைத்த முகம் இருப்பும்
சக்தியுயிர் நிலையிலிருந்து காரண நிகழ்வுகள்
சரிவமனார முனைகிறது என்று எட்கு.
📖 பாடல் எண்: (0551) 📖
நீரில் முழுகும் போது பொருள்மே லாசை
நிலையான கரையில் வந்தால் நிலம் மேல் ஆசை
கூர்ந்து நெற்றி தனிலும் வெண்ணீறு அணியும் போது
குறிப்பன மக்கள் பெண்டடிர் சுற்றத் தாசை
ஊர்தனிலு மந்திரங்கள் ஓதும் போது
உற்ற பசியாகும் மனமதின்மே லாசை
பார்தனிலே தேவார மோதும் போது
பலவிதமாய் மனமொடிப் பார்த்த தாண்டே.
📖 பாடல் எண்: (0552) 📖
சித்தமுடன் செபதபங்கள் செய்தோ மென்பார்
செப்புகிறேன் அவர்களுட செய்தி எல்லாங்
காத்தனுட பாதமலர் நினைக்க மாட்டார்
காடுசுற்றி ஓடியபின் கலங்கு வார்கள்
நித்யமுடன் நிஷ்டையிலும் நிற்க மாட்டார்
நிலத்திலுள்ள ஆசையெல்லாம் நினைத்துக் கொள்வார்
சத்தம்னுதான் தேவாரங் கூகை போலுஞ்
சதாநித்ய மோதிகுடி கெடுப்பர் ஆண்டே.
📖 பாடல் எண்: (0553) 📖
மறவாமல் அனுதினமும் பூசை என்பார்
மாந்தர்களுக் காணிதந்து கோடி வாங்க
இறவாமல் புவிதனிலே இருப்போ மென்று
இடும்பரெல்லாம் தலைகீழாய் யிறந்து போனார்
உறவான காயமிது ஒடுங்கும் போது
உலுத்தர்கள் தன் பின்னரரைக் காசும் போகா
அறிவாலே யறியாமல் புவியி லுள்ளோர்
அலகையெனத் திரிந்துலகம் அலைந்தார் ஆண்டே.
📖 பாடல் எண்: (0554) 📖
மண்டலத்தில் யானும்வந்து பிறந்தபின்பு
மருவுபெண்டிர் மக்கள்சுற்ற மாடு கன்றும்
தன் கரத்தால் வெகுகாசு செம்பொன் காணி
தரணிதனில் தனம்பெறவுஞ் சார்ந்தே னென்று
என்றுமிந்த வாழ்க்கையெனக் கேற்கு மென்று
இருந்ததனால் திருவள்ளுவ னிசைந்து பார்த்தேன்
ஒன்றுமில்லை பிரபஞ்சம் வீண தாச்சு
உகந்தெந்தன் சாதிகுல முரைசெய் வேனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣4️⃣ ஞானவெட்டியான் (555-563) 👈