திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0518) 📖
ஜெனனமுத்தி சித்திபெறுந் தெய்வசித்தி மோக்ஷவரை
இனமறிந்து வுலகுதனி லீடேறி வாழ்ந்தவற்கு
கனரத்ன மேலதிக காரியமாஞ் சற்குருவந்
தினமறிந்து தீட்சைவைத்து இயம்பினவா றெய்திலனே.
📖 பாடல் எண்: (0519) 📖
அஷ்டஅயிஸ் பரியமதும் யானளித்து வான்புவியில்
கஷ்டமணு காமலுமே காரியகுருக் கள்வந்து
இஷ்டமறை வேதசிவ இன்பருள் பூசைவிதி
சிஷ்டையெனக் களித்துத் தீக்ஷைவைத்து ஓதினரே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0520) 📖
கைப்பொருள் வாங்கி யுபதேசஞ்சொல்லிக் கருதியேதான்
மெய்பொரு ளாவி மேன்மேலெ னக்கெய்து விளக்கமறி
மைப்பொழி தேவ மந்திரக் கியான வாறுதன்னைச்
சைப்படி தீட்சை தவமிது வென்று சாற்றினரே.
📖 பாடல் எண்: (0521) 📖
கனமான பூசை பலிதூப தீப காரணமாய்
இனமாகச் சொல்லி யெடுத்துரைத்தாரிந்தப்பூமிதனில்
தனகன மேவிச் சிவபூசை ஓம தர்ப்பணமே
உனதனுஷ் டான உபதேச வாக்கிய மோதினரே.
வெண்பா
📖 பாடல் எண்: (0522) 📖
அவ்வும் உவ்வென்று ஐயுங் கிலிச்சவ்வும்
சிவ்வுமவ் வென்று செப்பினார்- யவ்வெனவும்
நகரமகர நாடி யருளோ மெனவும்
பகரமெனுந் தீக்ஷையிது பார்.
📖 பாடல் எண்: (0523) 📖
எட்டிரண்டும் பத்து விளிய தொருதீக்ஷை
அஷ்டமா சித்தி விளையாடு- மிஷ்டமுடன்
ஐயஞ்சு மாற அவனி முதல்வான
மெய்யிதுபார் ஜெகவசிய மேல்.
சிவபூசைசெய்த விவரம் தரு
பூசைகள்செய்தேன் காண்- சிவக்கியான
பூசைகள்செய்தேன்காண்.
📖 பாடல் எண்: (0524) 📖
வாசிக்குதிரைமேலேறிக் கேசரத்தின்
வழியோடேசென்றுச் சுழியறியாமலும்
வேசிக்குளாசை விரகத்துடனேயான்
வெறும்பூசைமணியாட்டி வீணுக்கேயன்
ஆசித்துசற்குரு தெய்வமிதுவென்று
அர்ச்சித்து ஆத்துமந்தன்னையறியாமல்
நேசித்துப்பூசைநிஷ்டையறியாமலும் நின்றே
நிமித்தமாய்க்கண்டுருச் செய்தேன்யான்- பூசை.
📖 பாடல் எண்: (0525) 📖
கோலமறியாமல்காலையில் வில்வக்
கொழுந்தைமுறித்தினிகூகைகள் போலவும்
சாலவுந்தேவாரமோதித்துதித்துடன்
சங்கையறியாமல் பங்கப்பட்டேயினி
காலைதனிலெழுந்தாலயஞ் சுற்றிக்
கருத்தினில்வாசியைக்கண்டு துதியாமல்
சீலமலரையுயிரென்றறியாமல்
சென்றுபறித்துயான் கொண்டுவந்தர்ச்சனை- பூசை.
📖 பாடல் எண்: (0526) 📖
வானத்திலெழுந்த வாலாம்பிகையை
மதியாலறிந்து கெதியடையாமலும்
ஏனந்தனில்முளைத்தெழுந்த கொழுந்தை
யிறுக்கி நானினி முறுக்கிக்கிள்ளியே
ஞானப் பிரகாச மெய்ஞ்ஞான வித்தையால்
நாடிக் கருவூரில் நாதத்துடன்
மீன மேஷ மறியாமல் குருவந்து
வீணதாம் பூசைவிருதாவிற் செய்யவும்- பூசை.
📖 பாடல் எண்: (0527) 📖
ஆத்தும லிங்கத் தமுரியைக் கொண்டு
அறிவினா லர்ச்சனையான் துதியாமலும்
பார்த்திப லிங்கம் பிடித்துரு மன்தனை பாலித்துப்
பூசித்துக் கங்கையைத் தூற்றினான்
பூத்தமலர் கொண்டறுத்து ஆவிடைமேல்
பொழிந்து அர்ச்சனை வழிந்து பாய்ந்துமே
வேற்றுமை யென்றறியாமலுங் காரிய
வீணர் சொற்படியே யானும் பூசித்தேனே- பூசை.
📖 பாடல் எண்: (0528) 📖
தில்லைக் குளத்தின் கரை நந்தவனத்தில்
முல்லை யிதழ்கொண்டு அர்ச்சணை செய்யாமல்
கல்லைத் தெய்வமென்று சொல்லறியாமலும்
வில்வமலரை வெடுக்கென்று போட்டுயான்
அல்லல்லோ இதுயாது மறியாமல்
அம்பர பூசையடுத்துங் கிடையாமல்
வெல்லு நீரிறைத்துப் புவிக்குள்ளாக
வெகுவுயிர்கொன்று வதைத்துப் பலிசெய்து- பூசை.
📖 பாடல் எண்: (0529) 📖
தெண்டிரைக் குள்ளே செழித்த மலர்க்குள்ளே
ஜீவனிருப்பது பாவமென்றுஞ் சற்றே
கண்டறியாமல் கருத்தால் பறித்துக்
கடைத்தேறப் பூசை நடத்தினேனிப்படி
அண்டர்கள் போற்றுமுடலுக்குள்ளாத்துமம்
அங்கிருப்ப தென்றறியாமல் யானுமே
வண்டக் குருக்கள்மொழி தவறாமலு
மனத்தினாலே வலுவாயுருச் செய்து- பூசை.
📖 பாடல் எண்: (0530) 📖
காரண சற்குரு பாதமே நம்பியே
பூரணத்தைப் பார்த்துப் பூசைகள் செய்தேன் காண்
தாரணி யென்றறியாமலு நேமகந்தான்
செய்து ஆத்துமலிங்கமறியாதே
வாரணிமாமலர் வாலாம்பிகை பதம்
வாழுங்கருவூரில் வாழ்ந்திடும்போதிலே
பாரணையாகிய வாசியைவாவென்று
பாலித்து அன்னையின் பாதம் பணிந்தேனே- பூசை.
📖 பாடல் எண்: (0531) 📖
விந்துநாதத் தொனியந்தம் பொருந்திய
சுந்தரஞானச்சுகாதிதம் பெற்றுமே
இந்திரியசுகஇன்பச்சுழிமுனை
சந்தனகுங்குமகந்த பரிமள
தத்துவக்கியானந்தவமறி யாமலும்
உத்தமஞானஉபதேசங் காண்கிலார்
வித்துவித்துநாதசத்தறி யாமலும்
பெற்றபேரிப்படிச்சித்தர் சொல்வாக்கியம்- பூசை.
📖 பாடல் எண்: (0532) 📖
மூலச்சுழிமுனைவாலை குண்டலியே
ஞானத்திலேறிமெய்ஞ்ஞானமுங் காண்கிலார்
பாலத்திலுமயிர்ப்பாலமறியாமல்
காலத்திலுங்கற்பசாதனை செய்யாமல்
ஆதாரமாறுமேலாதாரங் காண்கிலார்
வேதாகமத்தில்விவேகமறியாமல்
நாதாக்கள்சொற்படி ஞாயமறிந்துமே
பேதாபேதமறிந்தாதியைக் காண்கிலார்- பூசை.
📖 பாடல் எண்: (0533) 📖
முத்திதருஞ்சுழிசித்திரக் கூடத்தினில்
அத்திமுகனருளர்ச்சனையார்த்திடார்
சித்தியருள்சிவசின்மயரூபமே
நித்தம்பூசியாமல் நின்றுமயங்கிநான்
பஞ்சபூதமறியாமலுஞ்சுறு
வஞ்சகக்காரிய பஞ்சகுருக்களால்
எஞ்செயலொன்றுமினியறியாமலு
நெஞ்சகமேநிலையாமலும் யானொரு- பூசை.
📖 பாடல் எண்: (0534) 📖
மதிமலராயிரத்தெட்டிதழ் சுற்றிலுங்
கெதிபெறுஞ்சிவக்கியானமறியாமல்
விதிமலர்சுழிமேவுஞ்சிங்காதனம்
பதியறிந்துபஞ்சாக்கினை காண்கிலார்
பத்துடன் தீக்ஷைப்பா லித்துச்செய்யாமலுஞ்
சத்திசிவரூபத்தையறியாமல்
இத்தனைகாலமிகுத்தவஞ்ஞானமே
யெத்தனைபூசையியல்புமறிகிலேன்- பூசை.
📖 பாடல் எண்: (0535) 📖
நாளுநாளுமிகநாடியெந்நாளுமே
நாகன்றிருவடிநானறியாமலும்
கோளுங்காரியகுருவினாலிப்படிக்
கூறறியாமலுங்கூட்டத்துடனேயான்
நூறுநூறுநூறுகோடிசதுர்யுகம்
நாடிநாடிஞானம்யானினிக்காண்கிலா
தூறுந்தூறுஞ்சித்தர்தூறினாலிப்படி
வாடிவாடிவாசிமாறாட்டமாகியே- பூசை.
📖 பாடல் எண்: (0536) 📖
உள்ளத்திலுள்ளமொருமைப்படாமலும்
ஊதுந்தாரைசுழியோசைகாணாமலும்
வள்ளலெனுஞ்சிவமாதுவம்பிகையின்
மலர்பொற்பாதமகிழ்ந்திருக்காமலும்
அண்டபிண்டமகண்டகடாகமு
மண்டலமூன்றுமதிமலர்ச்சனை
கண்டதாரையறிந்தூதிடும்வாசியை
நின்றறியாமல்நிராதரங்காண்கிலா- பூசை.
📖 பாடல் எண்: (0537) 📖
காயசித்தியறியாதகருத்தினை
மாயசித்திமகிழ்ந்துடன்மாய்கையில்
பேய்கள்கூத்துகளாடிப்பேரின்பங்காண்
வாய்மதத்தால்ஜெகவாழ்க்கையில்சிக்கியான்
காரமுஞ்சாரமுங்கண்டறியாமலும்
ஊருகள்தோறுமுழன்றுஅலண்டுமே
தேறுமெய்ஞ்ஞானசிவபதம்போற்றிடார்
வேறுடன்காரியவித்தையில்சிக்கியே- பூசை.
📖 பாடல் எண்: (0538) 📖
உப்புடன்புளியுவர்ப்பறியாமலும்
சொற்படிசொற்குருவாஞ்சையாலிப்படிக்
கைப்பொருள்தோற்றுக்கருத்தறியாமலு
முற்பகபூசாபலனருள்முத்தியில்
காரிக்குதிரைக்கனவேகப்பாய்ச்சலின்
ஏறியங்குபடியிறுக்கிமூலத்தினில்
சாரிவாராமல்தனிப்படவேஜெக
நாரியர்கையிலகப்பட்டுயானுமே- பூசை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣3️⃣ ஞானவெட்டியான் (539-554) 👈