திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
சாதிவகை தரு
சாதியைச்சொல்லுகிறேன்- என்னாண்டையே
சாதியைச்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0564) 📖
சாதியினில்பரப்பிரமகுலத்தினில்
தந்தையெனுஞ்சதுர்வேதசிந்தாமணி
சோதிதனில்ஞானசூக்ஷசடாதார
துய்யமதிசந்திரஜயனெங்கள்குலம்
பூதாதிஐந்தும்புனலில்மருவிய
வேதாகமத்தில்விளங்குஞ்சுகாதீத
மாதாரமூலமேலாதாரமீராறடங்கிய
வீட்டினிலாண்டையவன்சாதிகாண் – சாதி.
📖 பாடல் எண்: (0565) 📖
ஓதிவைத்தபிர்மஓங்கார தீட்சைதான்
ஓகோகோவானம்புவிபடைத்ததாகையால்
ஆதியுமந்தமெனக்குள்ளடங்கிய
ஆக்கினைசத்தமதீதமென்குலமே
பிர்மக்ஷத்திரியர்வைசியர்சூத்திரர்
பேதமறையிதுநாலுநாலும்விளங்கிடும்
கர்மிகள்கூடிகோத்திரமுண்டாக்கினர்
கலியுகமிதுவரலாறுகாணாண்டே – சாதி.
📖 பாடல் எண்: (0566) 📖
அந்தரவட்டத்தின்வானம்புவிக்குள்
அலங்காரமாகப்பதினுலுஞ்சேர்ந்திடுஞ்
சந்திரன்போலுந்துலங்கியபூரண
சாதிகுலந்தன்னிலா திகுலங்காணும்
இந்திரனக்கினியேமனிருதிவாய்
வேகவருணன்குபேரனீசானியன்
சந்திரப்பிரகாசத்தின்மூலத்தினுள்ளே
தழைத்திடுமென்குலசாதியிதாண்டையே – சாதி.
📖 பாடல் எண்: (0567) 📖
முப்பத்துமுக்கோடிதேவர்முனிவர்
முதலானஇந்திரநாரதாகின்னரர்
உற்பத்தியாகநாதவிந்தாலே
யுதித்தவாறெல்லாமாதித்தன்குலங்காணும்
அம்புவியாலுமனேகவுயிர்களும்
அண்டபிண்டமதிலாச்சுதனேகமுந்
தப்பில்லையேபரையம்பிகைதன்குலஞ்சாம்ப
சதாசிவன்தந்தைகாணாண்டையே – சாதி.
📖 பாடல் எண்: (0568) 📖
சிற்பரையானசிவசாம்புவன்குலஞ்
செந்துக்களெல்லாமென்சாதியின்வம்மிசந்
தற்பரைசோதிப்பிரகாசவர்க்கத்தினில்
சாம்புவனென்குலசாதிகாணாண்டையே
சின்மயமென்மயம்பொன்மயன்தன்மயஞ்
ஜீவசெந்தாதிஜெகமயமானதும்
நன்மயனாதச்சிரோன்மயமென்குலம்
நாதனென்வம்மிசநற்குலமாண்டையே – சாதி.
📖 பாடல் எண்: (0569) 📖
பறைபதினெட்டும்படைத்ததென்வம்மிசம்
பாருலகாதீதம்பார்க்கப்பலவிதஞ்
சீரருள்ஞானச்செழுஞ்சுடராதீத
திருவுருமூலச்சிவசாம்புவன்குலம்
ஆதியுமந்தமநேகமுண்டான
அண்டகடாகமதீதசெகங்களுஞ்
சோதியருள்சுழிமூலத்திலேசுக
ஞானகுலத்திருவள்ளுவனாண்டையே – சாதி.
📖 பாடல் எண்: (0570) 📖
சிஷ்டியிலுந்திருவள்ளுவனாயன்
தெளிந்தவேதாந்தச்சிவஞானசாதிகாண்
அஷ்டதிக்கெங்கும்புகழ்சிவசாம்புவன்
ஆண்டையேயுந்தனருள்பரசொர்க்கமே
சோதிச்சுழிமுனைதில்லைப்பதிநகர்ஆதிக்
கருவூர்வளர்திருநாட்டினில்
ஓதியவள்ளுவசாம்புவனாலுலகாதீத
மெங்குமுதித்தவராண்டையே – சாதி.
📖 பாடல் எண்: (0571) 📖
எங்கும்புகழ்திருசாம்பசதாசிவன்
எங்கள்குலவம்மிசாதிவர்க்கத்தினில்
இங்கதினாலுலகாதிதமீரேழுங்
கெங்கையுமக்கினிவாய்வுசத்தங்களும்
பிர்மாவிஷ்ணுருத்திரன்மூவரென்வம்மிசம்
பேரும்பிரகாதீதநாடுலகம்புகழ் – சாதி.
📖 பாடல் எண்: (0572) 📖
மண்ணும்விண்ணும்வன்னிவாய்வுசத்தங்களும்
பண்ணுமறைவேதநாலுமுதித்தவ
ரண்ணுமிண்ணுமாறுசாஸ்திரசூக்ஷமும்
எண்ணுமினியென்குலத்திலுய்த்தவாறு
பேதியரிட்டகட்டளைப்பிரகாரமும்
மேதினியோர்விளங்குமனுநீதி
ஆதியென்றேபலசாதிகுலவர்க்கஞ்
சேதியானபெண்ணிருசாதிகளாவதுஞ் – சாதி.
📖 பாடல் எண்: (0573) 📖
இப்படியேகுறித்தெங்கும்பிரகாசமாய்க்
கற்பனையாய்மறைவேதங்களோதினார்
எப்போதுமேயுலகெங்கும்வழக்கமாய்ச்
சொற்பிடிசொல்லுடுஞ்சூதுகளாண்டையே
பிர்மக்ஷத்திரியர்வைசியர்சூத்திரர்
கர்மசூஸ்திரங்கள்கட்டினார்துய்யமதி
துர்மவிசேஷசுயஜெகஜாலமேவர்ம
மறிந்தருள்வள்ளுவனோதினான் – சாதி.
📖 பாடல் எண்: (0574) 📖
இந்தவிதமென்றறியாருலகில்
எந்தன்குலத்தையிகழ்ச்சிகள்பேசினார்
உந்தன்செயல்சிவசாம்பவமூலமே
அந்தவிதியோடன்றறியாரென்னாண்டையே
மாலப்பறையனென்றேசேரன்சோழனு
மாடுகள்செத்துமேவாற்றிந்தானதே
யோலமென்றேயதையுண்ணும்படிசெய்தார்
ஒகோபாவிகாளுற்பத்திகாண்கிலார் – சாதி.
📖 பாடல் எண்: (0575) 📖
ராஜாங்கஞ்செய்தநடத்தையின்குறி
வேதாகமத்தில்விதித்தவாறல்லகாண்
ஆசாரமல்லபீசாபலயோகமே
கோசபீசத்தில்குலங்கள்செனித்ததே
மனிதனாய்ப்பிறந்தவனிமீதினில்
மானுகாளுங்கள்வளப்பமறிவதும்
யோனிநாலல்லவோவேழுவகைப்படி
யோகதிசைஞானமெட்டில்விளங்குமே – சாதி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 3️⃣6️⃣ ஞானவெட்டியான் (576-592) 👈