திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0452) 📖
ஒட்டுப் பலகைதனி லொருசானை துக்கருகே
நட்டசுழி கம்பமதி னடுவனையின் வீதியிலே
மட்டத் தனஞ்செயனு மாறிவுட பாதமதால்
விட்ட வுதையாலே வெங்கநதியோ ரம்வந்தேன்.
📖 பாடல் எண்: (0453) 📖
முன்னிழுக்கப் பின்னிழுக்க மூவர் மறித்திழுக்க
என்னைச் சுமந்தஅன்னை யினிவே தனைப்படவும்
தன்னிரக்க மில்லாத் தனஞ்செயனுந் தானெழுந்து
சன்னல்வழி திறக்கத் தாவி யுதைத்தானே.
வெண்பா
📖 பாடல் எண்: (0454) 📖
உதைத்த வுதையாலே யுள்ளமெல்லா நொந்துஅன்னை
பதைத்துத் துடித்துப் பரதவித்தான்- சகத்ததிலே
ஊற்றுக்கா லோடே யொருகொம் பிருந்ததந்த
ஆற்றுக்கால் வந்தமர்ந்தே னாண்டே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0455) 📖
கூடிக் குலாவி யன்னை பிதாவுங் குழைந்துருகி
வேடிக் கையாக விரும்பு கின்றவெளி நாதவிந்து
ஓடிக் கலந்து வுருண்டு திரண்டுரு வானபின்பு
நாடிப் புவியில் நான்வரு பாடதை நாடறிந்தே.
பிறந்தவகை தரு
தனனாந்தன தனனா தானதன- தனனாந்தனதன
தானதனனா.
📖 பாடல் எண்: (0456) 📖
பிர்மாதிகடந்து- துருதைத்த
பெருவெளியாகியதோர்திட்டு கடந்து
இருமாவொருமாவில்- வருந்தியதோ
ரின்பரசமாயிருந்தகெங்கை கடந்து
மருமாலெழுத்தோடே- தில்லைப்பதியில்
வாழ்ந்துடனேவீற்றிருந்தகெதியை விட்டு
அரிமாலயன்தேடி அறியாத
அம்பரத்திலாடுகின்றபம்பரம் விட்டேன்- தனனாந்.
📖 பாடல் எண்: (0457) 📖
குறிப்பாயெனைவளர்த்த- முதலான
குய்யமுதல்நடுவணை மையமும்விட்டு
அறியாதெழுந்துநின்ற- செங்கநதி
ஆடுகின்றதில்லைவெளியம்பரம் விட்டுச்
சிறியாப்பிறையான- சிதம்பரத்தின்
திருக்குளக்கருக்குகைமுறுக்கை விட்டு
வறியடிமூங்கிலிலே- நின்றதொரு
தாசகவுகாசமெனும்நேசமும் விட்டேன்- தனனாந்.
📖 பாடல் எண்: (0458) 📖
கரையொருபுறமாக- வரவழைத்துக்
கைக்கனிபோல்வைத்திருந்தசக்கரம் விட்டு
திரையாமறைவீட்டில்- வீற்றிருந்த
சீர்கமலத்திருக்கேணிவாசல் விட்டுக்
கரையாதுணையும்விட்டு- எனைப்பிரிந்து
முன்மறித்துப்பின்னெழுப்புஞ்சந்நிதி விட்டு
கரையாநலையும்விட்டு- நானிருந்த
நாணியுஞ்சங்கதாரையின் வேணியும்விட்டேன்- தனனாந்.
📖 பாடல் எண்: (0459) 📖
ஒட்டியடிமுட்டியும்விட்டு- நின்றதொரு
வூத்தைக்குழியானதொருசேற்றையும் விட்டுக்
குட்டிமறைச்சுட்டியும்விட்டு- மெய்ஞ்ஞானபர
குருவான அன்பறிவுவூரையும்விட்டு
மட்டுமேயெண் சாணுடலி- லிரண்டுசாணு
மாறியேவளர்ந்தகருவூரையும் விட்டுச்
சட்டெனச்சக்கரத்ததனில்- தனஞ்செயனுந்
தாக்கவுமேயென்மனது வேக்கமும்விட்டேன்- தனனாந்.
📖 பாடல் எண்: (0460)
தொக்குத்தொட்டெழுத்தையுங் கொண்டு- அம்பரத்தினில்
சோதிநடனம்புரியும்வீதியும் விட்டு
தக்கபுகழ்சுழியைவிட்டு- நந்திகொலுவின்
தடத்தினில்வீற்றிருந்தேன் திடத்தைவிட்டுத்
திக்கினியநாடுவிட்டு- சிவமிகுந்த
செந்தியொளிசிவசிங்கா தனத்தைவிட்டு
அக்கினிகம்பத்தையும்விட்டு- அடுத்துவிளை
யாடவுமிருந்ததன்கூடம் விட்டாண்டே- தனனாந்.
📖 பாடல் எண்: (0461) 📖
மக்கக்சிக்கச்சக்கரத்திலே- வருகையிலே
மாறிதனஞ்செயனுமேமீறி யுதைத்தான்
உக்கிரமதாய்நானிருந்த- பாண்டத்துக்கு
வுடம்பெல்லாநொந்துமெத்தத் தள்ளாட்டமதாய்ப்
பக்கமுள்ளமாதர்கள்வந்து அன்னையவட்கு
பத்திரமாயெச்சரிக்கையுத்தரஞ் சொல்லிச்
சிக்கியேநான்வருகையிலே- சுமந்திருந்த
சித்துடம்புதத்தளிக்கச் சத்தமிடவே- தனனாந்.
📖 பாடல் எண்: (0462) 📖
தோய்ந்ததுக்கமிகவதித- சுற்றிலும்நின்ற
தோகையர்கள் மெள்ளவத்துவள்ளலுதவ
கைத்தலத்தையிருத்திக்கொண்டு- அன்னையவட்குக்
கைலாகையாகவுமை மெய்லாகையால்
மெத்தெனவேயிருந்தவர்கள்- இருபுறமும்
வீற்றிருந்தமாதர்களும் பார்த்திருக்கவுஞ்
சாஸ்திரவேதங்களோதும்- வெகுசித
சாந்தகுணமாகமொழி தாழ்ந்துரைக்கவும்- தனனாந்.
📖 பாடல் எண்: (0463) 📖
சூஸ்திரமாய்ச்சலக்குடத்தை- முன்னையும்விட்டுச்
சுகமுடனென்னுடலைப் பின்னையும்விட்டு
காத்திருந்தமருத்துவிச்சி- அவளிரண்டு
கரத்தில்விரலைத்தொட்டு அழுத்தினளே
வேற்றுமுகமாகவேதான்- முந்தியன்னையும்
வெகுண்டுவெகுண்டுமிரண்டிடவும்
கூற்றுவனாய்ச்சமைந்ததென்று- அன்னைமிகவுங்
கூக்குரலாய்ச்சத்தமிக நோக்கிடவே- தனனாந்.
📖 பாடல் எண்: (0464) 📖
சையோகஞ்செய்யும்போது- இருந்தமனஞ்
சந்தோஷந்தப்பிபின் சந்தோஷமாய்
நொய்யதிருநாதவிந்து வரும்போது
நுண்மையறியார் பெரியோராண்மையறியார்
பைதனிலுந்திரண்டுருண்டு- வருகையிலும்
பத்தியுடனேயுலகில் புத்திரனென்று
ஐயமறஅறிந்துகொள்வார்- எனைச்சுமந்த
அன்னையுடவருத்தத்தை யாருமறியார்- தனனாந்.
📖 பாடல் எண்: (0465) 📖
வெய்யவனுதிததநாட்டில்- வெகுசாயனும்
வேதனைகளாவந்துபிறந்துவிட்டேன்
வையகமெலாந்துதிக்கும்- பிர்மாவுடைய
மைந்தன் சரஸ்வதி யெந்தனன்னையுமாச்சு
துய்யபபிர்மநிஷ்டை- உதித்தருளுஞ்
சுகந்த பரிபூரணஞானகுலங்காண்
செய்வினையாலமைத்த- பூர்வக்கியான
சித்தியருளாலமைத்த செய்கையிதாண்டே- தனனாந்.
📖 பாடல் எண்: (0466) 📖
விதிமதியிரண்டளவால்- விந்துநாதமு
மிகுந்தவச்சிரக்குகை பைதனிலே
அதிகசுக்கிலசுரோணித- மிரண்டுங்கூடி
அமைத்தபடியால் யோகசாதகத்தால்
பதியராஜாங்கயோக- தீட்சைபலத்தின்
பக்குவமுதித்தந்தப்பாரில் வந்தேன்
நிதியைஸ்வரியத்துடன்- விளங்குகின்ற
நித்தியசவுக்கியகுலமுற்றவனாண்டே- தனனாந்.
📖 பாடல் எண்: (0467) 📖
திருவுருகருவிதுமூண்- டமைத்தகுல
தெய்வீகதிரிமூர்த்தியான வரலாறு
மருமலர்சுகந்தபரி- மதிரவியின்
மாமலர்க்கமலரத்ன பூமலர்காணும்
அருதிருவுருவாகி பிர்மாதிகுலம்
அவனிதனிலுதித்த அமிசையினால்
குருவனுக்கிரகச்செயலால்- குவலயத்தில்
குறைவொன்றுமிலை காணிந்தவகையாண்டே- தனனாந்.
விருத்தம்
📖 பாடல் எண்: (0468) 📖
உந்திவிட்டுப் புவியதனி லமைத்து யானும்
உதித்தசிறு சிற்றிடைப்பெண் மாத ரெல்லாம்
எந்தியிரு கரத்தாலு மனைத்து அன்னை
எனையெடுத்து வொருபுறத்தில் கிடத்தி னார்கள்
நொந்துபட்ட அன்னையர்க்குத் துகிலும் வாங்கி
நுண்மையதா யடிவயிறு தாங்கக் கட்டி
விந்துவிட்டோன் கோத்திரத்தின் குலங்கள் வாழ்க
விளங்குபுத்ரன் பிறந்ததென விளம்பு வாரே.
📖 பாடல் எண்: (0469) 📖
எடுத்தென்னைக் கிடத்திவைத்து மாத ரெல்லாம்
ஏறெடுத்து என்முகத்தைப் பார்க்கும் போது
படுத்துயான் கிடக்கையிலுந் தும்மல் மீறப்
பற்றிடவுங் குளிர்ந்தஜலம் பொழிந்தே மாதர்
எடுத்தெந்தன் முகந்தனிலு மிறைக்கும் போதி
லேற்றமணி பூரகத்தை நோக்கி யானும்
அடுத்திருந்த அருளையெல்லா மேவி மேவி
யம்புவியி லாசைகொண் டமைந்திட் டேனே.
📖 பாடல் எண்: (0470) 📖
விண்ணைவிட்டு வெளிதனிலும் யானும் வந்து
விரும்பியெனைச் சுமந்திருந்த அன்னை பார்த்துக்
கொண்ணுவிட்டுப் போகவந்த கூற்ற னென்று
கொடூரமுட னென்முகத்தைக் குறித்துச் சிந்தை
கண்ணெடுத்துப் பாராமல் சலிப்புண் டாகிக்
களையாகி மூன்றுபட் டினியு மாச்சு
எண்ணமிட்டுக் கொண்டிருந்தே னறைக்கு ளேதா
னெடுத்தெனக்கு வுதவிசலங் கொடுத்திட்ட டாரே.
📖 பாடல் எண்: (0471) 📖
ஆகமதில் நானிருந்து வந்த போது
அங்கமெல்லாம் வேதனையா யீன்ற அன்னை
தாகமுடன் மனசோப மிகவு மாச்சு
சஞ்சலத்துக் காளானோ மையோ வென்று
வேகமுட னென்னையொரு புறத்திற் போட்டு
வெறுமையுட னவளுமொரு புறமே சாய்ந்து
கோபமினி யறியாமல் நானப் போது
கூகூவென் றழுதுசத்தம் கூப்பிட் டேனே.
📖 பாடல் எண்: (0472) 📖
என்வருத்த மறியாம லய்யோ பாவி
ஏன்கிடந்து கூவுகிறா யென்ன பாவ
முன்வருத்த மூன்றுநா ளுபவாச மாச்சு
மூர்ச்சையுட னெனக்கிளைப்பு மிகவு மாச்சு
என்வருத்த மறியாம லமிர்தங் கேட்டு
ஏனழுதாய் என்றனக்கோர் பிராண னில்லை
பின்வருத்தங் கொண்டுநீ வருவா யென்று
புத்திசற்று மறியாமல் பிசகி னேனே.
Next Post